இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல நிறுவனங்கள் புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வருகிறது.
இப்பிரிவில் மிகப்பெரிய ஆதிக்கம் செய்த டாடா மோட்டார்ஸ் புதிதாக அறிமுகம் செய்த டாடா டியாகோ எலக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தக் காருக்கு குவிந்துள்ள வரவேற்பை பார்த்து சக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை மதியம் 12 மணிக்குப் புதிதாக அறிமுகம் செய்துள்ள டாடா டியாகோ எலக்ட்ரிக் கார்களுக்குப் புக்கிங் திறந்தது, ஒரு நாளுக்குள் சுமார் 10000 பேருக்கும் அதிகமாக இந்தக் காருக்குப் புக்கிங் செய்துள்ளனர்.
இதுவரையில் எந்தொரு கார் நிறுவனம் 10000 எலக்ட்ரிக் கார் புக்கிங்-ஐ இதுவரையில் பதிவு செய்தது இல்லை.
டாடா டியாகோ எலக்ட்ரிக் கார்
இந்தச் சிறப்பான வரவேற்பை பார்த்து வியந்து போன டாடா மோட்டார்ஸ் புதிய டாடா டியாகோ எலக்ட்ரிக் கார்களுக்கு அறிவித்திருந்து அறிமுகம் கார் விலையில் கூடுதலாக 10000 பேருக்கு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
விலை தான் பிரச்சனை
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது, ஆனால் விலை தான் பிரச்சனை எனக் கூறப்பட்டும் வரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் வெறும் 8.49 லட்சம் ரூபாய் என்ற அறிமுக விலையை அறிவித்த நிலையில் 10000க்கும் அதிகமானோர் ஓரே நாளில் புக் செய்தனர்.
20000 கார்கள்
மக்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட டாடா மோட்டார்ஸ் இந்த விலையில் முதல் 10000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இதன் எண்ணிக்கையை 20000 ஆக அதிகரித்துள்ளது.
வெறும் 21000 ரூபாய்
டாடா டியாகோ எலக்ட்ரிக் காரை வாங்க விரும்பினால் வெறும் 21000 ரூபாய் முன்பணத்தில் டாடா டீலர் மற்றும் ஆன்லைனில் புக் செய்யலாம். மேலும் இந்தப் புதிய கார் நாட்டின் முக்கியப் பகுதிகளில் இருக்கும் மால்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது என டாடா மோட்டார்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2023 முதல் டெலிவரி
மேலும் தற்போது புக் செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் ஜனவரி 2023 முதல் டெலிவரி செய்யத் துவங்கப்படும், மேலும் கார் நிறம் மற்றும் வகைக்கு ஏற்ப கார் டெலிவரி நாள் மாறுபடும். இந்தக் கார் 5 நிறத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மைலேஜ்
மேலும் 19.2kwh பேட்டரி பே கொண்ட கார்கள் 250 கிலோமீட்டரும், 24kwh பேட்டரி பேக்குகள் கொண்ட கார்கள் 315 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கிறது. மேலும் இந்தக் கார் 10 முதல் 80 சதவீதம் வரையிலான சார்ஜிங் வெறும் 57 நிமிடத்தில் செய்யக்கூடிய fast charging வசதிகளைக் கொண்டு உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications