டாடா குழுமம், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க மாபெரும் திட்டத்தைத் தமிழ்நாட்டை நம்பி தீட்டியுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிற்குப் புதிய பலம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஏற்கனவே பாக்ஸ்கான், பெகாட்ரான் எனப் பல நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் உற்பத்தியைத் தீவிரமாகச் செய்து வரும் வேளையில், டாடா குழுமம் தனது ஆட்டத்தை ஓசூரில் துவங்கியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன்-களுக்கான கேசிங் அமைப்பை உருவாக்க டாடா எலக்ட்ரானிக்ஸ் என்ற பெயரில் மாபெரும் தொழிற்சாலையைக் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் அமைத்து இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இந்த நிலையில் டாடா குழுமம் ஓசூர் தொழிற்சாலையை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது. ஏற்கனவே விரிவாக்க பணிகளை அறிவித்த டாடா குழுமம் ஓசூர் தொழிற்சாலையை சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் தொழிற்சாலையை காட்டிலும் மிகப்பெரிய தொழிற்சாலையாக மாற்ற திட்டம் தீட்டியுள்ளது.
டாடா குழுமம் தற்போது ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 20 அசெம்பிளி லைன்கள் அமைக்கத் திட்டம் தீட்டியுள்ளது, இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. மேலும் அடுத்த 12-18 மாதங்களில் புதிய அசெம்பிளி லைன்கள் அமைக்கப்பட்டுச் செயல்பாடு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விரிவாக்கம் மூலம் டாடா எலக்ட்ரானிக்ஸ் வெளிநாட்டு உதிரிபாகங்களை நம்பி இனி ஐபோன் தயாரிக்கும் நிலை குறையும், கேசிங் முதல் பல்வேறு உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது.
தற்போது டாடா குழுமம் கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் கார்ப்பரேஷனின் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலையை கைப்பற்றியதன் மூலம் ஐபோன் தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாக டாடா உருவெடுத்துள்ளது.
சீனாவைத் தாண்டி ஆப்பிள் தனது உற்பத்தியை உலக நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் டாடா முக்கியப் பங்கு வகுக்கிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்பிள் மற்றும் அதன் சப்ளையர்கள் அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆண்டுதோறும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை உற்பத்தி செய்யத் தயாராகி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது டாடா குழுமம், பாக்ஸ்கான், பெக்ட்ரான் ஆகிய நிறுவனங்கள் சுமார் 7 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன் தயாரித்து இந்தியாவிலும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விற்பனை செய்ய உள்ளது. மேலும் ஒட்டுமொத்த உற்பத்தியில் இந்தியா தற்போது 7 சதவீதம் பங்கீட்டை வகிக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications