குஜராத்தின் சனந் என்னும் முக்கியமாக தொழிற்துறை பகுதியில் மேம்பட்ட செமிகண்டக்டர் அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் தொழிசாலையை அமைக்க அமெரிக்காவின் மைக்ரான் மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தொழிற்சாலை அமைக்க இன்று பூமி பூஜை செய்யப்பட்ட நிலையில், இத்திட்டம் மூலம் டாடா குழுமத்திற்கு ஒரு ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனைக்கு மத்தியில் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்காவின் மைக்ரான் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதாக அறிவித்து 3 மாதத்தில் படபடவென் அனைத்து ஒப்புதல்களையும் பெற்றும், நிலத்தை தேர்வு செய்து தற்போது பூமி பூஜை போட்டு உள்ளது.

அமெரிக்காவின் மைக்ரான் நிறுவனம் இத்தொழிற்சாலையை சுமார் 2.5 பில்லியன் டாலர் அதாவது 23000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக மைக்ரான் 825 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்ய உள்ளது.
மைக்ரான் தொழிற்சாலை 2024 முதல் பயன்பாட்டில் வரும் என கூறுப்படும் வேளையில் மைக்ரான் தொழிற்சாலையை கட்டமைக்க டாடா குழுமத்தின் EPC பிரிவான டாடா புராஜெக்ட்ஸ் உடன் மைரான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய உற்பத்தித் துறையில் பெரிய அளவிலான மற்றும் நிலையான உள்கட்டமைப்பு திட்டத்தில் டாடா புராஜெக்ட்ஸ் முக்கிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பதற்கு மைக்ரான் திட்டம் ஒரு சான்று.
இதுக்குறித்து வெளியிட்டப்பட்ட அறிக்கையின்படி, சனந்த்-ல் குஜராத் தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான சாரோடி என்னும் பகுதியில் சுமார் 93 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மாபெரும் தொழிற்சாலை கட்டமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டத்தில் கட்டுமானத்தில் 500,000 சதுர அடியில் கிளீன் ரூம் அமைக்கப்பட உள்ளது.
மைரான் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக DRAM மற்றும் NAND அசெம்பிளி மற்றும் டெஸ்டிங் தொழிற்சாலையில் டிசைன் மற்றும் கட்டுமானத்தை உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications