டாடா சன்ஸ் நிர்வாகத்தில் மூன்றாவது உறுப்பினரை நியமிப்பது குறித்து முடிவு செய்ய இன்று டாடா டிரஸ்ட் நிர்வாகம் முக்கிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. டாடா டிரஸ்ட் தலைவர் நோயல் டாடா இந்த பதவிக்கு வலுவான போட்டியாளராக உள்ளார், இதேவேளையில் இன்று நோயல் டாடா ட்ரஸ்டி நாமினி டைரெக்டராகவும் நியமிக்கப்படலாம்.
டாடா சன்ஸ் என்பது டாடா குழுமத்தில் இருக்கும் 165 நிறுவனங்களுக்குமான ஒரு ஹோல்டிங் நிறுவனம். இதை தற்போது என்.சந்திரசேகரன் தலைமையிலான இயங்கி வருகிறது, டாடா குழுமத்தின் இயக்கத்திற்கு டாடா சன்ஸ் தலையாய பொறுப்பு வகிக்கிறது.

இந்த நிலையில் ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு அவர் வகித்த அனைத்து பதவிகளுக்கும், பொறுப்புகளும் மாற்று நபரை நியமிக்க வேண்டும். அந்த வகையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் டாடா டிரஸ்ட் சார்ப்பில் முக்கிய உறுப்பினராக இருந்த ரத்தன் டாடா மறைந்த நிலையில், இவரிடத்தில் டாடா டிரஸ்ட் சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
தற்போது டாடா டிரஸ்ட் நிர்வாக தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்ட நிலையில் டாடா சன்ஸ் நிர்வாக உறுப்பினர் பதவியும் நோயல் டாடா எடுத்துக்கொள்ள வாய்ப்பு அதிகம். இல்லையெனில் நோயல் டாடா தனது வாரிசுகள் யாரேனும் ஒருவரையும் நியமிக்கலாம் என பேச்சு அடிப்படுகிறது.
டாடா சன்ஸ் தலைவர் பதவிக்கு முதலில் போட்டிப்போட்டவர் நோயல் டாடா, ஆனால் ரத்தன் டாடா இவருக்கு பதவியை கொடுக்காமல் சைரஸ் மிஸ்திரிக்கு கொடுத்தார். சைரஸ் மிஸ்திரி-க்கும் டாடா நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்படவே ரத்தன் டாடா மீண்டும் தலைவர் பதவியை ஏற்றார்.
இதன் பின்பு ரத்தன் டாடா ஓய்வு பெற்ற பின்பு டாடா சன்ஸ் தலைவர் பதவியில் யார் அமரப்போகிறார்கள் என்ற பெரும் கேள்விக்கு அதிரடியாக முடிவு எடுக்கப்பட்டது. பொதுவாக இத்தகைய பெரும் பதவிகளில் குடும்ப உறுப்பினர்களை நியமிப்பது அல்லது அதிக பங்குகளை வைத்துள்ளவரை நியமிப்பது வழக்கம்.
ஆனால் ரத்தன் டாடா, டாடா குழுமத்திற்கு வேகம் வேண்டும் என்ற முடிவுடன் அப்போது டிசிஎஸ் சிஇஓ-வாக இருந்த என்.சந்திரசேகரனை நியமித்தார் ரத்தன் டாடா. இவருடைய முடிவு தவறாகவில்லை, சந்திரசேகரன் நிர்வாக பொறுப்பை ஏற்ற பின்பு மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்தது டாடா குழுமம்.
இந்த நிலையில் டாடா சன்ஸ் நிர்வாகத்தில் நோயல் டாடா நுழையும் ஒரு வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. இதன் மூலம் நோயல் டாடா-வுக்கும், என்.சந்திரசேகரன்-க்கும் பிரச்சனை வெடிக்குமான என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்பது டாடா குழுமத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது தெரிகிறது.
ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் டாடா ட்ரஸ்ட் 66% பங்குகளை வைத்திருக்கிறது, இதில் சர் ரத்தன் டாடா ட்ரஸ்ட் மற்றும் சர் டோரபஜி டாடா ட்ரஸ்ட் முக்கிய ட்ரஸ்ட்கள் ஆகும். டாடா சன்ஸின் விதிகள் படி, அதன் இயக்குநர்களில் மூன்றில் ஒரு பகுதியை டாடா ட்ரஸ்ட் நியமிக்க அதிகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது டாடா ட்ரஸ்ட் முக்கிய கூட்டம் நடத்துகிறது.
டாடா சன்ஸ் அடுத்த சில நாட்களில் அதன் நிர்வாகத்தில் புதிய நியமனங்களை மேற்கொள்ளலாம். தற்போது 70 வயதான பாஸ்கர் பட் விலக உள்ளார், இந்த இறுதி கூட்டத்தைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இயக்குநரகத்தில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரோடு, ஜாகுவார் லேண்ட் ரோவர் இயக்குநரான 69 வயதான ரால்ஃப் ஸ்பெத் விரைவில் விலகுவார் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு பேரின் இடத்தில் புதிய நபர்களை நியமிக்கப்பட வேண்டும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications