இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமத்தை ரத்தன் டாடாவுக்கு பின் மிகப்பெரிய வளர்ச்சி பாதைக்கு திருப்பியவர் என்றால் டாடா சன்ஸின் தலைவரான என்.சந்திரசேகரன் தான். இவருடைய பதவி காலத்தில் பல வர்த்தக பிரிவை சரிவில் இருந்து மீட்டு எடுத்துள்ளது மட்டும் அல்லாமல் பல புதிய வர்த்தகத்தில் டாடா குழுமம் இறங்கி வரலாற்றை படைத்துள்ளது.
இந்த நிலையில் என்.சந்திரசேகரன் அவர்களின் பதவி காலம் முடிய உள்ள நிலையில், டாடா நிர்வாகம் மூன்றாவது முறையாக அவருடைய பதவியை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பதவி நீட்டிப்பில் டாடா குழுமத்தில் எப்போதும் நடக்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. இது டாடா குழுமத்தின் வரலாற்றில் முக்கியமான விஷயமாக இருக்கப்போகிறது.

டாடா சன்ஸ் சேர்மன் ஆக இருக்கும் என்.சந்திரசேகரனின் இரண்டாவது பதவி கால நீட்டிப்பு வருகிற 2027 பிப்ரவரி மாதத்தில் முடிவடைய உள்ளது. அப்போது அவரின் வயது 65 இருக்கும். டாடா குழுமத்தின் விதிகளின்படி, நிர்வாக பதவிகளில் இருப்பவர்கள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது தான். ஆனால் அந்த நபர் விரும்பினால் 70 வயது வரை non-executive பதவிகளில் தொடரலாம்.
இந்த முக்கியமான விதிகளை தளர்த்தி என்.சந்திரசேகரன் அவர்களுக்கு 3வது பதவி காலம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக உயர்மட்ட குழு ஆலோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் டாடா டிரஸ்ட்ஸ், செப்டம்பர் 11-ஆம் தேதி நடந்த கூட்டத்தில், சந்திரசேகரனுக்கு மூன்றாவது ஐந்து ஆண்டு பதவி நீட்டிப்புக்கு ஒப்புதல் அளித்து முன்மொழிவை நோயல் டாடா மற்றும் வேணு ஸ்ரீனிவாசன் முன்வைத்தனர்.

என்.சந்திரசேகரனின் பதவி நீடிப்புக்கு முன்வைக்கப்பட்ட காரணங்கள் மிகவும் முக்கியமானவை. டாடா குழுமம் அடுத்த 20-30 வருடத்திற்கான வளர்ச்சி பாதையை செமிகண்டக்டர், எலக்ட்ரிக் வாகன பேட்டரிகள் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கிய திட்டங்களை கையாள தொடர்ச்சியான ஒரு அனுபவம் மிக்க தலைவர் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இது மட்டும் அல்லாமல் டாடா எலக்ட்ரானிக்ஸ், டாடா டிஜிட்டல், தேஜஸ் நெட்வொர்க்ஸ் போன்றவை பிற முக்கிய வர்த்தகங்களும் டாடா குழுமத்தின் வளர்ச்சியில் முக்கிய பகுதியாக விளங்கி வருகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications