இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமாக இருக்கும் டாடா குழுமத்தில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்த ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு சேர்மன் ஆக நோயல் டாடா நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிரடியான முடிவுகளும் மாற்றங்களும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டாடா டிரஸ்ட் அமைப்பின் செலவுகளை குறைத்து, அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக நிர்வாகக் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர நோயல் டாடா தலைமையிலான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம், டாடா டிரஸ்ட் அமைப்பின் நிதியைத் திறம்பட நிர்வாகம் செய்ய உள்ளது.

இந்த கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு பகுதியாக, டாடா டிரஸ்ட் அமைப்பில் இனி வரும் காலத்தில் தலைமை நிதி அதிகாரி (CFO) மற்றும் தலைமை செயல்பாட்டு அதிகாரி (COO) பதவிகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் செலவுகளைக் குறைக்க மற்றொரு செயல்படாக, வெளிப்புற ஆலோசகர்களை அதிகளவில் நம்பியிருப்பதைக் குறைக்க உள்ளது டாடா டிரஸ்ட்.
டாடா டிரஸ்ட் நிறுவனத்தில் ஊழியர்களுக்கான செலவுக்கு மட்டும் 180 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது, 2022ல் பல்வேறு திட்டங்களில் நேரடியாக ஊழியர்களை நியமிக்கும் முறையின் வாயிலாக சுமார் 400 கோடி ரூபாய் செலவானது. இந்த நிலையில் ஊழியர்கள் செலவுகள் குறித்து நிறுவனத்திற்குள் ஆய்வு செய்து, நிதியியல் ஆய்வுக்கு கூடுதலாக உட்படுத்தப்பட்ட தற்போது COO, CFO பதவிகளையும் நீக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
டாடா அறக்கட்டளைகளின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சர்மா இந்த மாற்றங்களைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிட உள்ளார், திறமையான நிர்வாகம் மற்றும் திறன்வாய்ந்த கண்காணிப்பு வழிமுறைகள் செயல்படுவது மூலம் அதிகப்படியான ஊழியர்கள் இல்லாமலேயே சிறப்பாக இயங்க முடியும் என டாடா டிரஸ்ட் நம்புகிறது.
டாடா குழுமத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-ல் 66 சதவீத பங்குகளை வைத்திருக்கும் டாடா டிர்ஸ்ட் அமைப்பு நோயல் டாடா வந்த உடனேயே தனது மறுசீரமைப்பு திட்டத்தை வேகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்திலும் COO பதவி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications