இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் கடந்த 2-3 மாதங்களாக யாருக்கு டிரஸ்டி பதவி கொடுப்பது என்பதில் பெரும் போராட்டம் இருந்து வந்தது. சொல்லப்போனால் மொத்த டாடா டிரஸ்ட் டிரஸ்டிகளும் இரு பிரிவுகளாக பிரிந்துக்கொண்டு சண்டையிட்டு வந்தனர்.
இதனால் டாடா டிரஸ்ட் அமைப்பில் பெரிய புயலே உருவானது. இந்த நிலையில் இப்புயலை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக 2 சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளது. டிரஸ்டியை நியமிப்பதில் பெரும் பிரச்சனையாக இருந்த மெஹ்லி மிஸ்திரி இப்பதவியை விட்டு விலகிய நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் தனது முக்கிய அறக்கட்டளையான சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் நிர்வாகத்தில் இரு புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

டாடா குரூப் தலைவர் நோயல் டாடாவின் மகன் நெவில் டாடா மற்றும் டைட்டன் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பாஸ்கர் பட் ஆகியோர் இந்த டாடா டிரஸ்ட் நிர்வாகத்தில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் மூன்று ஆண்டுகள் பதவி வகிப்பர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது, டாடா குரூப்பின் அடுத்த தலைமுறையை தலைமை பொறுப்பில் தயார்படுத்தும் படியாக பார்க்கப்படுகிறது. இதேபோல் டாடா டிரஸ்ட்-ல் டாடா குடும்பத்தின் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற முடிவில் நோயல் டாடா உறுதியாக இருப்பதையும் பார்க்க முடிகிறது.
அதே கூட்டத்தில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேனு சீனிவாசனின் டிரஸ்டி பதவி காலம் வாழ்நாள் முழுவதும் இருந்தது மூன்று ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. இந்த மாற்றம், மகாராஷ்டிரா அரசின் புதிய விதியால் ஏற்பட்டது. இந்த விதிப்படி, அறக்கட்டளை நிர்வாகத்தில் வாழ்நாள் உறுப்பினர்கள் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. இது, அறக்கட்டளைகளின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதிப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் மூலம், டாடா டிரஸ்ட்ஸ் போன்ற பெரிய அமைப்புகளின் உள் நிர்வாக அமைப்பில் மறுசீரமைக்கத் வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
நெவில் டாடா:
நெவில் டாடா, ஏற்கனவே ஜேஆர்டி டாடா டிரஸ்ட், டாடா சோஷியல் வெல்ஃபேர் டிரஸ்ட் மற்றும் ஆர்டி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினராக உள்ளார். இவை அனைத்தும் டாடா குரூப்பின் தொண்டு செயல்பாடுகளை கவனிக்கும் முக்கிய அமைப்புகளாக உள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல் படி வரும் காலத்தில் நெவில் டாடா, சர் ரத்தன் டாடா டிரஸ்ட் நிர்வாகத்திலும் சேர்க்கப்படலாம். Sir Dorabji Tata Trust மற்றும் Sir Ratan Tata Trust ஆகிய இரு அறக்கட்டளைகளும் சேர்ந்து, டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக இருக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 51 சதவீதத்திற்கும் மேல் பங்குகளை வைத்துள்ளன.
பாஸ்கர் பட்:
பாஸ்கர் பட், டாடா குரூப்பில் நீண்ட காலமாக பணியாற்றும் அனுபவமிக்க நிர்வாகி ஆவார். டைட்டன் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய அவர், நுகர்வோர் பொருள்கள் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். அவரது இணைப்பு, Sir Dorabji Tata Trust அறக்கட்டளையின் செயல்பாடுகளுக்கு புதிய உத்திகளைத் தரும்.
மெஹ்லி மிஸ்திரியின் விலகல்:
மெஹ்ல மிஸ்திரி, டாடா டிரஸ்ட்ஸின் முன்னாள் உறுப்பினர். இரு வாரங்களுக்கு முன், டாடா டிரஸ்ட்டின் பெரும்பான்மை உறுப்பினர்களால் அவர் நிர்வாகத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என வாக்களித்தனர். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்த அவர் சர் ரத்தன் டாடா டிரஸ்ட், சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் பாய் ஹிராபாய் ஜேஎன் டாடா நவசாரி சாரிடபிள் இன்ஸ்டிடியூஷன் டிரஸ்ட் ஆகியவற்றின் தலைவருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், தற்போது ஊடகத்தில் வெளியாகும் செய்திகள் டாடா டிரஸ்ட்ஸின் நலனுக்கு எதிரானவை என்று கூறி விலகுவதாக அரிவித்தார்.
இதன் வாயிலாகவே தற்போது நெவில் டாடா மற்றும் பாஸ்கர் பட் ஆகியோர் பணியில் சேர்ந்துள்ளனர்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications