இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் 60000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடனில் இருக்கும் நிலையில் இந்நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முயற்சியில் டாடா சன்ஸ் வெற்றிபெற்றுள்ள செய்தி ஊடகத்தில் வைரலான நிலையில் தற்போது DIPAM அமைப்பு இச்செய்தியைத் தவறு என டிவீட் செய்துள்ளது.
DIPAM அமைப்பு
மத்திய நிதியமைச்சகத்திற்குக் கீழ் இருக்கும் முதலீட்டு மற்றும் பொதுத்துறை சொத்து நிர்வாகத் துறை தான் ஏர் இந்திய உட்பட அனைத்து அரசு சொத்துக்கள் நிறுவனங்கள் தனியார்மயமாக்கும் திட்டத்தை நிர்வாகம் செய்து வருகிறது.
ஏர் இந்தியா - டாடா சன்ஸ்
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றும் ஏலத்தில் டாடா குழுமம் வெற்றிபெற்று உள்ளது வெளியான செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீ போலப் பரவிய நிலையில் DIPAM அமைப்பு இது தவறான செய்து என அறிவித்துள்ளது.
அரசு வெளியிடும்
ஏர் இந்தியாவைக் கைப்பற்ற டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் இறுதி ஏல விண்ணப்பத்தைக் கொடுத்துள்ள நிலையில், அரசு உரிய முடிவை எடுத்த பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என DIPAM அமைப்பு தனது டிவிட்டரில் அறிவித்துள்ளது.
எதற்காக இந்த மறுப்பு தகவல்
DIPAM அமைப்பின் செயலாளர் என்ற கணக்கில் இருந்து பதிவு செய்யப்பட்ட இத்தகவலை ஆல் இந்தியா ரேடியோவும் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இறுதி விண்ணப்பங்கள் பெற்றுள்ள நிலையில் எதற்காக இந்த மறுப்பு தகவல் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
சந்தேகம்
பொதுவாக இதுபோன்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியிடும் போது அரசு அமைப்புகள் கண்டுகொள்ளாது. ஆனால் இந்த முறை அரசு அமைப்புகளே தானாக முன்வந்து மறுப்பு தெரிவித்து இருக்கும் நிலையில் இந்த ஏலத்தில் டாடா தோல்வி அடைந்துள்ளதாக என்ற சந்தேகமும் வந்துள்ளது.
டிசம்பர்-க்கு முடிவு
மேலும் மத்திய அரசு டிசம்பர் மாதத்திற்குள் ஏர் இந்தியாவுக்குத் தீர்வு காண முடிவு செய்துள்ள நிலையில் விரைவில் அரசு டாடா சன்ஸ் நிறுவனமா அல்லது ஸ்பைஸ்ஜெட் நிறுவனமான என்ற முடிவு எடுத்தாக வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் ஏர் இந்தியா விற்பனை செய்வது உறுதி, டாடா அல்லது ஸ்பைஸ்ஜெட் வாங்குவதும் உறுதி. இதற்கான முடிவு தான் தற்போது தாமதமாகியுள்ளது.
அரசின் முடிவு
டாடா சன்ஸ் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் ஏல விண்ணப்பத்தைத் தணிக்கை செய்தது இறுதியாக யாருக்குக் கொடுப்பது என்பதை அமித் ஷா தலைமையிலான குழு முடிவு செய்யும்.
இக்குழுவில் அமித் ஷா மட்டும் அல்லாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயல், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் இருப்பார்கள்.


Click it and Unblock the Notifications