பிஸ்லெரி நிறுவனத்தினை டாடா குழுமம் வாங்கலாம் எனவும், இதற்கான பேச்சு வார்த்தை என்பது பல மாதங்களாகவே தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால் திடீரென தற்போது பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், டாடா குழுமம் பிஸ்லெரியை வாங்கும் திட்டத்தினை கைவிட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1985ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த பிஸ்லெரி நிறுவனம் இந்தியாவில் நுழைந்தது. இது மினரல் வாட்டர், குளிர் பானங்கள் வணிகத்தினை செய்து வந்தது. அதன் பிறகு அதன் வணிகத்தினை கோகோ கோலாவின் சில பிராண்டுகளுக்கு உரிமம் பெற்று வியாபாரத்தினை இன்னும் விரிவாக்கம் செய்தது.
வழி நடத்த ஆள் இல்லை
இப்படி வெற்றிகரமாக நடத்தி வந்த வணிகம் தான் பிஸ்லெரி. இந்த வணிகத்தினை தன்னை அடுத்து, சரியாக வழி நடத்தி செல்ல ஆள் இல்லை என இந்த நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் கூறினார். தன்னுடைய ஒரே மகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என கூறிய ரமேஷ் சவுகான், பிஸ்லெரியை விற்பனை செய்யவும் முடிவு எடுத்ததாக அறிவித்தார்.
டாடா - பிஸ்லெரி பேச்சு வார்த்தை
தனக்கு வயதாகி விட்டதால் நிறுவனத்தினை இனியும் தொடர்ந்து நடத்த முடியாது என விற்பனை செய்வதாக அறிவித்தார். அந்த சமயத்தில் டாடா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு வாங்க முன் வந்தன. ஆனால் பிஸ்லெவரியை டாடா குழுமம் வாங்கினால், அதன் வணிகம் இன்னும் சிறப்பாக வளர்ச்சி காணும் என கூறி, டாடா குழுமத்திடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் ரமேஷ் சவுகான்.
டாடா பிஸ்லெரி பேச்சு வார்த்தை முடிவு
ஆனால் தற்போது பிஸ்லெரி மற்றும் டாடா குழுமம் இடையேயான பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என டாடா கன்சியூமர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆக இதன் மூலம் டாடா குழுமம் பிஸ்லெரியை வாங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. டாடா வாங்கவில்லை எனில், பிஸ்லெரி நிறுவனத்தின் எதிர்காலம் என்ன? யார் இந்த நிறுவனத்தை இனி நிர்வாகம் செய்யபோகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயந்தி சவுகான் நிர்வாகம்
இதற்கிடையில் 42 வயதான ஜெயந்தி சவுகான் இனி பிஸ்லெரியை வழி நடத்துவார் என்றும், இனி நாங்கள் எங்கள் வணிகத்தினை விற்பனை செய்யவில்லை எனவும், பிஸ்லெரி தலைவர் ரமேஷ் சவுகான் தி எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜெயந்தி சவுகான் தற்போது பிஸ்லெரியின் துணைத் தலைவராக உள்ளார். ஆக இனி ஜெயந்தி சவுகான் பிஸ்லெரியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஏஞ்சலோ ஜார்ஜ் தலைமையிலான தொழில்முறை நிர்வாகக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications