உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வரும் டாடா குழுமம் 20 வருடத்திற்கு முன்பாக அமெரிக்காவில் தனது உணவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என 2000ஆம் ஆண்டில் டெட்லி டீ நிறுவனத்தைக் கைப்பற்றியது.
டாடா கன்ஸ்யூமர் கட்டுப்பாட்டில் இருக்கும் டெட்லி டீ நிறுவனத்தை விட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது டாடா. இந்நிறுவனத்தைக் கைப்பற்றும் போது இந்நிறுவனத்திற்குச் சொந்தமாக ஜார்ஜியாவில் இருக்கும் டீ தொழிற்சாலையும், அமெரிக்கா முழுவதும் டீ மற்றும் காஃபி விற்பனை செய்யும் வர்த்தகத்தையும் கைப்பற்றியது டாடா கன்ஸ்யூமர்.
இந்நிலையில் டெட்லி டீ வர்த்தகத்தை முழுமையாகத் தனது நீண்ட காலக் கூட்டாளியான ஹாரீஸ் டீ-க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது டாடா கன்ஸ்யூமர்.

இதன் மூலம் அமெரிக்க உணவு வர்த்தகத்தில் இருந்து இந்திய நிறுவனமான டாடா முழுமையாக வெளியேறுகிறது. டாடா-விற்கு இப்பிரிவு வர்த்தகம் தற்போது ஏதுவாக இல்லாத காரணத்தால் வர்த்தகத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது டாடா.
இந்த நிறுவனப் பங்கு விற்பனைக்குப் பின்பு டீ தொழிற்சாலை சதர்ன் டீ நிறுவனத்திற்குக் கீழாகவும், விநியோக வர்த்தகம் எம்பிரிக்கல் நிறுவனத்திற்குக் கீழ் நிர்வாகம் செய்யப்பட உள்ளது என டாடா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications