இந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்க ஏற்கனவே அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில் டாடா இத்துறையில் இறங்கத் திட்டமிட்டு அதற்காகப் பல முயற்சிகளைச் செய்து வருகிறது. இதில் குறிப்பாகப் பிக்பேஸ்கட் மற்றும் 1எம்ஜி நிறுவனங்களைக் கைப்பற்றப் பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே டாடா குழுமம் தனது ரீடைல் வர்த்தகத்தில் இருக்கும் அனைத்து நிறுவனங்கள், பிரிவுகளையும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது அடுத்தகட்டத்திற்கு உயர்ந்துள்ளது.
டாடா கிளிக்
டாடா குழுமத்தின் ஈகாமர்ஸ் பிரிவான டாடா கிளிக் நிறுவனத்தில் சுமார் 3,500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வெறும் 1,500 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கி வந்த டாடா கிளிக் இனி 5,000 கோடி ரூபாய் மூலதனம் வைத்து தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய உள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
இதுகுறித்த அறிவிப்பை டாடா கிளிக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான டாடா யூனிஸ்டோர் பங்குச்சந்தையில் அறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளது. மேலும் இப்புதிய முதலீடுகளைக் கொண்டு டாடா தனது வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.
குறிப்பாகப் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிகளவில் செலவு செய்ய முடியும்.
ஈகாமர்ஸ் வர்த்தகம்
டாடா குழுமத்தின் இந்த முதலீட்டின் மூலம் ஈகாமர்ஸ் துறையில் தனது திட்டத்தில் உறுதியாக இருப்பதும், விரைவில் பெரிய அளவிலான வர்த்தக மாற்றத்தைக் கொண்டு வர உள்ளது தெளிவாகத் தெரிகிறது.
ஏற்கனவே டாடா குழுமத்தின் ஸ்டார்பஜார், வெஸ்டுசைடு, டிரென்ட் ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் வர்த்தகத்திற்குத் தயாராகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
வருவாய் மற்றும் நஷ்டம்
2019-20ஆம் நிதியாண்டில் டாடா கிளிக் நிறுவனத்தின் வருவாய் 144 சதவீதம் வளர்ச்சி அடைந்து 266.03 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதேவேளையில் இந்நிறுவனம் லாபம் அடையாமல் 9.7 சதவீத அதிக நஷ்டத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் 2019-20ஆம் நிதியாண்டில் டாடா கிளிக் 270.64 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications