ஓசூரில் ஐபோன் அசெம்பிளி.. டாடா எலக்ட்ரானிக்ஸ் புதிய சாதனை.. இனி இந்தியாதான் டாப்பு..!!

இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமமான டாடா, மின்னணு உற்பத்தித் துறையில் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது அதிநவீன ஓசூர் ஆலையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 16 மாடல்களை அசெம்பிள் செய்யும் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் நடவடிக்கை, டாடா குழுமத்தை ஒரு முக்கியமான உலகளாவிய ஸ்மார்ட்போன் விநியோக நிறுவனமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னதாக, டாடா நிறுவனம் விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய தைவானிய நிறுவனங்களின் இந்திய பிரிவுகளைக் கையகப்படுத்தியதன் மூலம் தனது மின்னணு உற்பத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. இந்த புதிய அசெம்பிளி ஆலை, ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இருப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், சீனாவை அதிகம் நம்பியிருக்கும் நிலையை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓசூரில் ஐபோன் அசெம்பிளி.. டாடா எலக்ட்ரானிக்ஸ் புதிய சாதனை.. இனி இந்தியாதான் டாப்பு..!!

நிபுணர்கள் கருத்துப்படி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி, ஃபாக்ஸ்கான் போன்ற தைவானிய நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஸ்மார்ட்போன் விநியோகச் சங்கிலி துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக உருவெடுக்க உதவும். மொபைல் போன் அசெம்பிளியைத் தொடங்குவதற்காக, டாடா குழுமத்தின் மின்னணுப் பிரிவு ஓசூரில் உள்ள தனது உற்பத்தி நிலையத்தில் ஒரு புதிய பிரிவை அமைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இதுவரை, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தனது ஆலையில் ஐபோன்களுக்கான வெளிப்புற உறைகளை மட்டுமே உற்பத்தி செய்து வந்தது. முன்னதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் கர்நாடகாவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் வசதியில்தான் ஐபோன்களை அசெம்பிள் செய்து வந்தது என்று கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்புதான் ஓசூர் வளாகத்தில் ஒரு புதிய ஆலையில் அசெம்பிளி பணிகளைத் தொடங்கியது. ஆரம்பத்தில் இரண்டு உற்பத்தி வரிகளை நிறுவிய நிலையில், மேலும் விரைவில் அதை குறைந்தது நான்கு வரிகளாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு உற்பத்தி வரியிலும் முழுமையான அசெம்பிளி பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஒரு வரிசையில் 2,500 பேருக்கு மேல் வேலை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

ஓசூரில் உள்ள இந்த புதிய அசெம்பிளி பிரிவு முழுமையாக செயல்படத் தொடங்கியதும், இது விஸ்ட்ரான் ஆலையில் உள்ள செயல்பாடுகளை விட மிகப் பெரியதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வேகமாக வளர்ந்து வருவதுடன், ஆப்பிளின் பிற முக்கிய சப்ளையர்களான விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவற்றின் இந்திய பிரிவுகளைக் கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆப்பிள் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ச்ஸ் நிறுவனங்கள் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வழங்கவில்லை.

கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குனர் தருண் பதக் கூறுகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, முழு அளவிலான ஐபோன் அசெம்பிளியில் ஈடுபடுவது ஒரு மூலோபாய படியாக இருக்கலாம். இது மற்ற விநியோகச் சங்கிலி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் மற்றும் நாட்டில் அதிக மதிப்பு கூட்டலைச் சேர்ப்பதற்கு மிகவும் முக்கியமானது.

இந்த வளர்ச்சி ஆப்பிள் நிறுவனத்திற்கும் பயனளிக்கும் என்று நிபுணர்கள் எகனாமிக் டைம்ஸிடம் தெரிவித்தனர். சைபர்மீடியா ரிசர்ச் நிறுவனத்தில் உள்ள தொழில்துறை ஆராய்ச்சி குழுவின் துணைத் தலைவர் பிரபு ராம் கூறுகையில், சீனாவிற்கு அப்பால் தனது சப்ளையர்களை பன்முகப்படுத்த தீவிரமாக முயற்சி செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்திற்கு, டாடா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதன் இந்திய இருப்பை மேலும் வலுப்படுத்தும். ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் வேகமாக வளர்ந்து செயல்பாட்டு முதிர்ச்சியைப் பெறுவதால், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைகளுக்கான உற்பத்தியை துரிதப்படுத்துவதுடன், விநியோகச் சங்கிலி அபாயத்தையும் குறைக்க ஆப்பிள் நிறுவனம் நன்கு தயாராக உள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது தடத்தை ஆழப்படுத்தவும், சீனாவை அதிகம் நம்பியிருப்பதைக் குறைக்கவும் முயற்சிக்கும் நிலையில், இரண்டு வலுவான மற்றும் முதிர்ச்சியான சப்ளையர்களின் இருப்பு அந்த வளர்ச்சியை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

பிரபு ராம் மேலும் கூறுகையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடனான தனது ஈடுபாட்டை மேலும் ஆழப்படுத்துவதால், உலகளாவிய மின்னணு மதிப்புச் சங்கிலியில் நம்பகத்தன்மையையும், உற்பத்தியின் அளவையும் கட்டியெழுப்புவதற்கு அது நல்ல நிலையில் உள்ளது. இது ஒரு போட்டித்தன்மை மிக்க மற்றும் முழுமையான உற்பத்தி கூட்டாளியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு முக்கியமான படியாகும். முன்னதாக, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஓசூர் உற்பத்தி நிலையத்தில் ஆப்பிள் ஐபோன்களுக்கான உறைகளின் உற்பத்தியை வேகமாக அதிகரித்து வருகிறது. மே 12 வெளியான செய்தி அடிப்படையில், டாடா நிறுவனம் தனது தற்போதைய உறைகள் உற்பத்தி திறனை சுமார் 50,000 ஆக இரட்டிப்பாக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+