கத்தார் நகை கடையை வாங்கும் டைட்டன் நிறுவனம்.. இது லிஸ்ட்லயே இல்லையேப்பா..!!

கத்தாரை சேர்ந்த மன்னை கார்ப் (Mannai Corp) நிறுவனம் தனது ஜூவல்லரி வர்த்தக நிறுவனமான டமாஸ் ஜூவல்லரியை (Damas Jewellery,) விற்பனை செய்ய கடந்த சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. தென்னிந்தியாவை சேர்ந்த 2 முன்னணி நகைக்கடைக்காரர்களுடன் இது தொடர்பாக மன்னை கார்ப் நிறுவனம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் வெற்றி பெறவில்லை.

அதேசமயம், கடந்த ஒரு வருடத்துக்கு முன் டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் பிராண்டான தனிஷ்க் உடன் மன்னை கார்ப் பேச்சுவார்த்தையை தொடங்கியது மற்றும் தொடர்ந்து கொண்டு இருந்தது. தற்போது இந்த பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இரு தரப்பினரும் தற்போது டமாஸ் ஜூவல்லரியின் மதிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

கத்தார் நகை கடையை வாங்கும் டைட்டன் நிறுவனம்.. இது லிஸ்ட்லயே இல்லையேப்பா..!!

டமாஸ் ஜூவல்லரியின் மதிப்பு தோராயமாக ரூ.4,500 கோடி என கூறப்படுகிறது. இருப்பினும், டமாஸ் மதிப்பு தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை என தகவல். டமாஸ் நிறுவனத்தை டைட்டன் கையகப்படுத்தினால், அது ஜிசிசி பிராந்தியத்தில் தனிஷ்கின் வர்த்தகத்தை கணிசமாக வலுப்படுத்துவதுடன் பிற இந்திய நகை கடைகளுடன் கடுமையாக போட்டிப்போடும் என்று இத்துறையை சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்தனர்.

1907ல் தொடங்கப்பட்ட டமாஸ் ஜூவல்லரி நிறுவனம் சவூதி, குவைத், யுஏஇ, கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளில் முன்னணி ரீடைல் நகை விற்பனையாளராக உள்ளது. 2012ல் கத்தாரை சேர்ந்த மன்னை கார்ப் குழுமம் டமாஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. 2024ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் டமாஸ் ஜூவல்லரி நிறுவனம் வருவாயாக ரூ.2,487 கோடியும், நிகர லாபமாக ரூ.7 கோடியும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனம் நகைகள் மற்றும் வாட்ச் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. டைட்டன் நிறுவனத்தின் நகை பிராண்ட் தனிஷ்க். இந்நிறுவனம் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கடைகளை திறந்துள்ளது. கடந்த ஜனவரியில் தனிஷ்க் பிராண்ட் துபாயின் கோல்ட் குக்கில் கடையை திறந்து ஜிசிசி பிராந்தியத்தில் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தி வருகிறது. தோஹா,ஷார்ஜா மற்றும் அபுதாபியிலும் தனிஷ்க் பிராண்டுக்கு விற்பனை நிலையங்கள் உள்ளன. டைட்டனின் நகைப்பிரிவில், தனிஷ்க்கை தவிர்த்து சோயா,காரட்லேன் மற்றும் மியா பை ஆகிய பிராண்டுகளும் உள்ளன.

தங்க நகைகளுக்கான உலகின் ஐந்தாவது பெரிய சந்தையாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. மேலும் தனிநபர் தங்க நகை பயன்பாட்டில் 2வது இடத்திலும் உள்ளது. 2023ம் ஆண்டு நிலவரப்படி, அந்நாட்டின் தனிநபர் தங்க நகை பயன்பாடு 5.07 கிராமாக உள்ளது. முதலிடத்தில் ஹாங்காங் உள்ளது. அங்கு தனிநபர் தங்க பயன்பாடு 5.12 கிராமாக உள்ளது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+