தேசிய பென்ஷன் திட்டம் என்பது விருப்பப்பட்டு முதலீடு செய்யும் பென்ஷன் திட்டமாகும். இதில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் தங்களது ஓய்வுப் பலன்களுக்காக முதலீடு செய்யலாம். 18 முதல் 60 வயது வரையிலான யாரும் தேசிய பென்ஷன் திட்ட அக்கவுன்ட்டை திறக்கலாம்.
இந்த தேசிய பென்ஷன் திட்டம் தேசிய பென்ஷன் சிஸ்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மக்களுக்காக 2009 ஆம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்டது. விருப்பப்பட்டு முதலீடு செய்யப்படும் இந்த தேசிய பென்ஷன் திட்டம் தனி நபர்களுக்கான நீண்ட கால சேமிப்பாகவும் ஓய்வுக்குப் பின்னர் தேவைப்படும் நிதித் தேவைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தை பென்ஷன் பண்டு ரெகுலேட்டரி டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்ற அமைப்பு வழிநடத்துகிறது. அரசு, தனியார் மற்றும் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்யலாம். 18 முதல் 60 வயதான யாரும் இந்த தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்து பலன்களைப் பெறலாம்.
வழக்கமாக அரசு அலுவலகங்கள், தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களது சம்பளத்தில் இருந்து தொழிலாளர் பிராவிடண்ட் பண்டுக்கான தொகை பிடித்தம் செய்யப்படும். 20 வருடங்கள் பிஎப் பிடித்தம் செய்யப்பட்டால் அதன்மூலம் அந்த ஊழியருக்கு ஓய்வூதியப் பலன்களும் கிடைக்கும்.
அது தவிர பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் பிஎப்பில் இருந்து ஒரு பெரிய தொகை கிடைக்கும். பிஎப் கணக்கில் செலுத்தப்படும் பணத்துக்கு ஆண்டுக்கு வட்டியும் வரும். இடையில் கல்விக் கட்டணம் மருத்துவச் செலவுகள் போன்ற அவசரத் தேவைக்காக பிஎப்பில் இருந்து
பணம் எடுத்துக் கொள்ளலாம்.
பணி ஓய்வுக்குப் பின் இதுபோன்ற பென்ஷன் திட்டங்கள் மூலம் பாதுகாப்பான நிதியை பெறலாம். எனவே வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் ஏதாவது ஒரு பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்து வந்தால் அவர்களது பணி ஓய்வுக்குப் பின் நிதி பாதுகாப்பு கிடைக்கும்.
தேசிய பென்ஷன் திட்டம் மக்களுக்கு மிகவும் பலன் தரக்கூடிய திட்டமாகும்.
More From GoodReturns

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications