மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல வருமான வரி மற்றும் வரி விதிப்பு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாகக் கார்பரேட் வரிக் குறைப்புக் காரணமாக முதலீட்டுச் சந்தை மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.
வருமான வரி தாக்கல்
மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அறிக்கையில், வருமான வரி செலுத்துவோர் செய்த தவறுகளைச் சரி செய்ய வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, மத்திய நிதியமைச்சகம் 2 வருடத்திற்குள் திருத்தப்பட்ட வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யும் வாய்ப்பை கொடுத்துள்ளது.
ஊனமுற்ற குழந்தைகளுக்கான காப்பீடு
பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஊனமுற்ற குழந்தைகள் பெயரில் எடுக்கப்படும் காப்பீட்டுக்குப் பெறப்படும் ஆனுவிட்டி அல்லது லம்ப் சம் தொகைக்கு முழு வருமான வரி விலக்கு அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார்.
கூட்டுறவுச் சங்கங்கள்
கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆகக் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்தார். இதன் மூலம் ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை வருமானம் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மீதான கூடுதல் கட்டணம் 7% ஆகக் குறைக்கப்படும்.
என்பிஎஸ் திட்டம்
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்புக்கான வரி விலக்கு வரம்பு 10% இல் இருந்து 14% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாநில அரசு பணியிடங்களில் இருக்கும் ஊழியர்களுக்கு நன்மை அளிக்கும்.
இந்த 14 சதவீத வரிச் சலுகை என்பது மத்திய அரசு ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் அளவீடு.
LTCG வரி
பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான நீண்டகால முதலீட்டு லாபம் மீதான கூடுதல் வரி 15% ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கார்பரேட் சர்சார்ஜ்
கொரோனா தொற்றில் இருந்து பாதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களுக்கும், இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குமான கார்பரேட் சர்சார்ஜ் வரி 12 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
வரிக் குறைப்பு
பாலிஷ் செய்யப்பட்ட வைரத்திற்குச் சுங்க வரி 5 சதவீதமாகக் குறைப்பு
சோடியம் சைனேட் மீதான சுங்க வரி அதிகரிப்பு
குடைகள் மீதான சுங்க வரி 20 சதவீதமாக அதிகரிப்பு
ஸ்டீல் ஸ்கிராப் மீதான இறக்குமதி தளர்வுகள் அடுத்த ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications