சென்னை: புதிய நிதியாண்டு 2024-25 ஏப்ரல் 1 முதல் தொடங்கி உள்ளது. அந்த வகையில் வரி செலுத்துவோர் கவனிக்க வேண்டிய சில முக்கிய தேதிகளை டெட்லைன் ஆக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி முடிவடைகிறது.
புதிய நிதியாண்டு துவங்கிவிட்டாலே தனிநபர்கள் வருமான வரியை குறைக்க செய்யப்படும் முதலீடுகள், அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவது முதல் நிறுவனங்கள் வருடாந்திர கணக்கை சமர்ப்பித்தல் வரை பல்வேறு நிதி மற்றும் வரி தொடர்பான பணிகளை செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த வகையில் வருமான வரி தொடர்பாக இந்த ஆண்டின் முக்கியமான பணிகளுக்கான கடைசி தேதிகள் இதுதான்.

ஏப்ரல் 7, 2024: மார்ச் 2024 இல் அரசாங்க அலுவலகம் மூலம் எடுக்கப்பட்ட அல்லது வசூலிக்கப்பட்ட வரிகளைச் செலுத்துவதற்கான காலக்கெடு ஏப்ரல் 7ம் தேதி.
ஏப்ரல் 14, 2024: பிப்ரவரி 2024 இல் பிரிவு 194-IA, 194-IB, 194M மற்றும் 194S ஆகிய பிரிவுகளின் கீழ் கழிக்கப்பட்ட வரிக்கான TDS சான்றிதழை வழங்குவதற்கான டெட்லைன் இதுவாகும்.
ஏப்ரல் 15, 2024: அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு டீலரிடம் இருந்து பெறப்படும் நிதி குறித்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருமான வரித்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 2024 வரையிலான காலத்தை உள்ளடக்கிய 3 மாதங்களுக்கு ஃபார்ம் நம்பர் 15CCஐப் பயன்படுத்தி அறிக்கை அளிக்க வேண்டும்.
ஏப்ரல் 30, 2024: அரசு அலுவலகங்கள் மார்ச் 2024 மாதத்திற்கான வரி பிடித்தம் (TDS/TCS) செலுத்தப்பட்டு, பிரிவு 194-IA, 194-IB, 194M, 194S (குறிப்பிட்ட நபரால்) கீழ் சலான் வழங்கப்படவில்லை என்றால், அந்த வரித் தகவலை 'படிவம் 24G’ மூலம் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 30, 2024 ஆகும்.
படிவம் 24G என்றால் என்ன?: படிவம் 24G என்பது வருமான வரித் துறையால் வழங்கப்படும் ஒரு மின்னணு படிவமாகும். இந்த படிவத்தைப் பயன்படுத்தி, அரசாங்க அலுவலகங்கள் தங்கள் மூலம் பிடித்த வரித் தொகையை (TDS) மத்திய அரசாங்கத்திற்கு செலுத்திய விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் 30, 2024: அக்டோபர் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட படிவம் எண். 60 இன் விவரங்கள் அடங்கிய படிவம் எண். 61- ஐ இ-ஃபைலிங் செய்வதற்கான காலக்கெடு தேதியும் இதுதான்.
ஃபார்ம் 15G என்பது 60 வயதுக்குட்பட்ட தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் (HUFs) பூர்த்தி செய்து வங்கிகளுக்கு வழங்கக்கூடிய படிவமாகும். படிவம் 15H என்பது இந்திய குடிமக்கள் மற்றும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் சமர்ப்பிக்கக்கூடிய படிவமாகும். இந்த இரண்டையும் சமர்ப்பிக்கும் தேதி மார்ச் 31, 2024 இல் முடிவடைகிறது. இதற்கான காலக்கெடு இப்போது வரை நீட்டிக்கப்படவில்லை.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications