மத்திய நிதியமைச்சர் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையைச் சாமானிய மக்கள் எந்த அளவிற்கு முக்கியமான மற்றும் சாதகமான அறிவிப்புகள் இருக்கும் நம்புகின்றனரோ, அதேவகையில் நிறுவனங்களுக்கும் கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக அதிகப்படியான அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கிறது.
Recommended Video
இந்த நிலையில் கொரோனா 2வது அலையில் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையில் இருந்த குழப்பத்தைத் தீர்க்கும் வண்ணம் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக வருமான வரிச் சட்டத்தில் மிக முக்கியமான மாற்றத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சேர்க்கப்பட்டவர்களுக்கான வரிச் சலுகைகள் அளிப்பது தொடர்பான நிறுவனங்களுக்கான வருமான வரி சட்ட விதிகளில் மாற்றங்களைச் செய்ய வருமான வரி துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ரூ.25,000 சம்பளம்
வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80JJAA மாத சம்பள உச்சவரம்பு ரூ.25,000 உடன் சேர்க்கப்படும் ஒவ்வொரு புதிய வேலைக்கும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குகிறது.
240 நாட்கள்
ஒரு நிறுவனம் மத்திய அரசின் இந்தச் சலுகை மூலம் வரி விலக்கு பெற வேண்டும் என்றால், புதிதாகச் சேர்க்கப்பட்ட பணியாளர், அந்த நிறுவனத்தில் தத்தம் வருடத்தில் குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
EPF அல்லது ESI
மேலும் இந்தச் சலுகையைப் பெறுவதற்கு ஒரு நிறுவனம் இக்காலகட்டத்தில் பணியில் சேர்க்கப்பட்ட ஊழியரின் வருங்கால வைப்பு நிதி அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டு அதிகாரிகள் அல்லது இரண்டையும் ஆவணங்களாகக் காட்டி வரி விலக்குகளை வழங்குவதற்குச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கான மாற்றங்களைத் தான் வருமான வரி அதிகாரிகள் தற்போது மாற்றக் கோரிக்கை வைத்துள்ளனர்.
குழப்பம் தீர்ந்தது
இந்த மாற்றம் மூலம் நிறுவனங்களுக்கு இருந்து நீண்ட நாள் குழப்பம் தீர்ந்துள்ளது மட்டும் அல்லாமல் எப்படிக் கணக்குக் காட்ட வேண்டும், அரசின் வரிச் சலுகையை எப்படிப் பெறுவது என்பதில் தெளிவாகியுள்ளனர்.
வரிச் சலுகை
மேலும் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நிறுவனங்களுக்கான இந்த வரிச் சலுகை திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு இருக்கும் காரணத்தால் பட்ஜெட்க்கு முன் வருமான வரிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது அல்லது இந்த மாற்றம் குறித்த அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் வெளியிடப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications