இந்திய மக்களுக்கு எப்போதும் வெளிநாட்டின் வாழ்க்கை மீது ஒரு கண் இருக்கும், இதனாலேயே பல டெக் ஊழியர்கள் ஆன்சைட் வாய்ப்புக்காக தவமாய் தவமிருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 5 வருடத்தில் இந்த நிலைமை மாறி இந்திய குடியுரிமை வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு வெளிநாட்டில் குடியுரிமை பெற தயாராகியுள்ளனர்.
சமீபத்தில் இதுக்குறித்து வெளியான ரிப்போர்ட் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவின் பிரபலமான தணிக்கையாளரும், மணிபால் குரூப் சேர்பர்சன், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியியல் அதிகாரியான மோகன்தாஸ் பாய் பரப்பரப்பான கருத்தை வெளியிட்டு உள்ளார்.

மோகன்தாஸ் பாய் தனது டிவிட்டரில் இந்தியாவில் இருந்து 6500 பெரும் பணக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் தங்களுடைய குடியுரிமை விட்டு வெளியேறினர். இது மிகவும் கவலை அளிக்கும் விஷயம் என நிதியமைச்சகத்தை டேக் செய்துள்ளார். இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகியுள்ளது.
அதிகப்படியான வரி தீவிரவாதம், புதிய டிசிஎஸ் வரி மாற்றம் போன்ற கடுமையான வரி விதிமுறைகள் உள்ளது. இதை உடனடியாக எளிதாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் டிவிட்டரில் தனது பதிவில் டேக் செய்துள்ளார் மோகன்தாஸ் பாய்.
2023 ஆம் ஆண்டுக்கான Henley Private Wealth Migration Report தற்போது வெளியாகியுள்ளது, இந்த ஆய்வறிக்கையின் படி இந்த ஆண்டு குறைந்த பட்சம் 6500 பணக்கார இந்தியர்கள் இந்தியாவை விட்டு வேறு நாடுகளுக்கு குடியேறுவார்கள் என தெரிவித்துள்ளது.
இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாட்டுக்கு செல்லும் பலர் கொரோனா தொற்று காலத்தில் உயர் தர மருத்துவ வசதிகளின் தேவைக்காக செல்வதாக கூறினர். இந்த எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
2022 ஆண்டின் இறுதியில் லோக் சபாவில் எழுத்துப் பூர்வமாக மத்திய வெளியுறவு துறையின் மாநில அமைச்சரான வி.முரளீதரன் அளித்த பதிலில் 2015ல் 1,31,489 பேர்; 2016ல் 1,41,603 பேர்; 2017ல் 1,33,049 பேர்; 2018 இல் 1,34,561 பேர்; 2019 இல் 1,44,017 பேர்; 2020 இல் 85,256 பேர் மற்றும் 2021 இல் 1,63,370 பேர் இந்திய குடியுரிமை விடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதேபோல் 2022 ஆம் ஆண்டில் அக்டோபர் வரையில் சுமார் 1,83,741 பேர் இந்திய குடியுரிமையை விடுத்து உள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications