ஆர்பிஐ திடீர் முடிவு.. மக்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 6.25 சதவீதமாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி அளவை 7 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாகக் குறைத்தும், 2023ஆம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கத்தை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

ரிசர்வ் வங்கி நடப்பு நிதியாண்டில் மட்டும் 4 முறை வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது, இன்றைய உயர்வின் மூலம் 5 முறையாக அதிகரித்துள்ளது.

இன்றைய கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகளைத் தீவிரமாக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா.. ரெடியா இருங்க, பர்ஸ் ஓட்டை ஆகப் போகுது..!வீட்டுக் கடன் வாங்கியுள்ளீர்களா.. ரெடியா இருங்க, பர்ஸ் ஓட்டை ஆகப் போகுது..!

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் மூலம் இதுவரையில் மக்கள் விற்பனையாளர்கள் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான மாத அடிப்படையில், காலாண்டு அடிப்படையில் வரும் பில்களை மட்டுமே செலுத்தி வந்த நிலையில், ஆர்பிஐ இந்தச் சேவையை வாடகை தொகை, பள்ளி கட்டணம், வரி, மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணத்தைச் செலுத்தவும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஆர்பிஐ கவர்னர் இன்றைய நாணய கொள்கை கூட்டத்தின் போது தெரிவித்தார்.

பேமெண்ட், கலெக்ஷன்

பேமெண்ட், கலெக்ஷன்

மக்களின் வாழ்க்கை முறையை எளிதாகக்கும் விதமாக ஆர்பிஐ தனது பாரத் பில் பேமெண்ட் சிஸ்ட்த்தை விரிவாக்கம் செய்ய உள்ளது. இந்த விரிவாக்கத்தில் recurring மற்றும் non-recurring சார்ந்த அனைத்துப் பேமெண்ட், கலெக்ஷன்களுக்கு இச்சேவையை அளிக்க உள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இதற்காக அனைத்துத் தரப்பு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களை இத்தளத்திற்கு அனுமதித்துள்ளது. இதன் மூலம் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் பெரும் பகுதி மக்களை அடைவது மட்டும் அல்லாமல் வெளிப்படையான பேமெண்ட் அனுபவம், வேகமாகப் பணப் பரிமாற்ற சேவை, நிதி கையாளுதலில் அதிகப்படியான திறன் எனப் பல நன்மைகள் இதில் உள்ளது. இந்த முடிவை நிதி துறையில் இருக்கும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

2017ல் அறிமுகம்

2017ல் அறிமுகம்

பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்தளத்தின் மூலம் இந்தியாவில் யார் வேண்டுமானாலும், எப்போதும் வேண்டுமானாலும் அனைத்து வகையான பேமெண்ட்-ஐ ஓரே இடத்தில் பெரும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

100 சதவீத பாதுகாப்பு

100 சதவீத பாதுகாப்பு

இதேபோல் பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம் ஆரம்பம் முதல் 100 சதவீத பாதுகாப்பாக விளங்கிய காரணத்தால் மக்கள மத்தியில் இதன் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதை நேரடியாக ஆர்பிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் NPCI நிர்வாகம் செய்யும் காரணத்தால் கூடுதல் நம்பிக்கைும் பாதுகாப்பும் கிடைக்கிறது.

பேமெண்ட் சேவை

பேமெண்ட் சேவை

பாரத் பில் பேமெண்ட் சிஸ்ட்த்தில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்ரடு, பிர்பெய்டு கார்டு, இண்டர்நெட் வங்கி சேவையில் இருக்கும் NEFT, UPI, வேலெட், ஆதார் அடிப்படையிலான பேமெண்ட் என அனைத்துப் பேமெண்ட் சேவைகளையும் ஓரே தளத்தில் அளிக்கிறது.

ஆர்பிஐ எவ்வளவு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கியது தெரியுமா..?ஆர்பிஐ எவ்வளவு டிஜிட்டல் ரூபாய் உருவாக்கியது தெரியுமா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tax to rent to school fees; RBI Expanding Bharat Bill Pay (BBPS) for all kinds of payments

Tax to rent to school fees; RBI Expanding Bharat Bill Pay (BBPS) for all kinds of payments
Story first published: Wednesday, December 7, 2022, 19:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X