மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தயாராகி வருகிறார். அதேசமயம் மத்திய பட்ஜெட்டில், நிலையான விலக்கை ரூ.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும், 80சி வரி விலக்குகளில் மேம்பாடுகள், புதிய வரி விதிப்பில் முறையில் எச்ஆர்ஏ-ஐ சேர்ப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிபுணர்கள் முன்வைத்துள்ளனர்.
பிஓடி இந்தியாவின் சந்தோஷ் சிவராஜ் கூறுகையில், 2018-19ல் நிலையான விலக்கு மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது, அப்போது முதல் போக்குவரத்து மற்றும் மருத்துவம் ஆகிய இரண்டிலும் பணவீக்கம் மற்றும் விலை உயர்ந்துள்ளது காரணமாகவும், பழைய அல்லது புதிய வரி விதிப்பு முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு சமத்துவத்தை கொண்டு வருவதற்காகவும் நிலையான விலக்கை குறைந்தபட்ச ரூ.1.20 லட்சமாக அதிகரிப்பது குறித்து நிதியமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.

எந்தவொரு சம்பள வரிச் செலுத்துவோரும் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக மாதம் ரூ.10,000 வீதம் ஆண்டுக்கு மொத்தம் ரூ.1.20 லட்சம் செலவழிக்க நேரிடும் என்பதால், நிலையான கழிவை உயர்த்துவது நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
வரி செலுத்துவோரின் பொதுவான கோரிக்கைளில் ஒன்று, புதிய வரி விதிப்பில் வீட்டு வாடகை படி (எச்ஆர்ஏ) விலக்குகளை இணைப்பதாகும். தற்போது பழைய வரி விதிப்பில் மட்டுமே எச்ஆர்ஏ விலக்கு நடைமுறையில் உள்ளது. இது வரி சேமிப்புக்கு உதவுகிறது.
இருப்பினும் இந்த விலக்கு தொகை மிகக் குறைந்த தொகையாக நிர்ணயிக்கப்படுகிறது. புதிய வரி விதிப்பு முறையில் இந்த விலக்கை சேர்ப்பது, கணிசமான வீட்டு செலவுகளை எதிர்கொள்ளும் வரி செலுத்துவோருக்கு புதிய வரி விதிப்பின் நடைமுறைத்தன்மையை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
முதலாளியிடமிருந்து பெறப்பட்ட உண்மையான எச்ஆர்ஏ அல்லது அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் (பெருநகரம் அல்லாதவர்களுக்கு 40 சதவீதம்) அல்லது அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் கழித்த வாடகை ஆகிய இந்த 3 காரணிகளில் குறைந்தபட்சம் ஒன்றை விட எச்ஆர்ஏ விலக்கின் அளவு அதிகமாக இருக்கக்கூடாது.
தனிநபர்கள் சில நிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமோ அல்லது தகுதி வாய்ந்த செலவுகளை செய்வதன் மூலமோ தங்கள் வரி வருமானத்தை குறைக்கலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படும். தங்கள் வரி பொறுப்புகளை குறைக்க விரும்பும் வரி செலுத்துவோருக்கு வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80சி ஒரு பிரபலமான தேர்வாக உள்ளது. இந்த பிரிவு எல்ஐசி மற்றும் பிபிஎஃப்க்கான பங்களிப்புகள் போன்ற பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உள்ளடக்கியது.
Story written by: Subramaian


Click it and Unblock the Notifications