டிசிஎஸ்-ல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் 1.25 லட்சம் பேர்.. இது ரொம்ப நல்ல விஷயம் தான்!

டிசிஎஸ் நிறுவனத்தில் கிட்டதட்ட 1.25 லட்சம் ஊழியர்கள் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகின்றனர்.

சராசரியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தில் இருக்கும் நடுத்தர மற்றும் மூத்த நிலைகளில் 1,25,000 ஊழியர்கள் இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் ஊழியர்கள்

டிசிஎஸ் ஊழியர்கள்

டிசிஎஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2022 காலாண்டு முடிவில் பணியாளர்களின் எண்ணிக்கை 6,13,974 ஆகும். இது செப்டம்பர் 2022 காலாண்டில் 6,16,171 பேராக இருந்தது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 2197 பணியாளர்களின் நிகராக குறைவாக உள்ளது என பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அட்ரிஷன் விகிதம்

அட்ரிஷன் விகிதம்

டிசம்பர் 2022உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் அட்ரிஷன் விகிதம் 21.3% ஆக குறைந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் தொடர்ந்து திறமைகளை அதிகப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. இதற்கிடையில் தான் அதன் உற்பத்தி திறனும் அதிகரித்துள்ளது. இதன் அட்ரிஷன் விகிதமும் அதிகரித்துள்ளது.

கற்றல் நேரம் அதிகரிப்பு

கற்றல் நேரம் அதிகரிப்பு

டிசிஎஸ் தொடர்ந்து திறமைகளை அதிகரிக்க கற்றல் நேரத்தினை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டிசிஎஸ் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது நீண்டகால நோக்கில் அதிகளவில் இருக்க காரணமாக அமைந்துள்ளது. இதுவே அட்ரிஷன் விகிதம் குறையவும் காரணமாக உள்ளது.

டிசிஎஸ்-ன் கவனம்

டிசிஎஸ்-ன் கவனம்

தொடர்ந்து கடந்த சில காலாண்டுகளாகவே நிறுவனம் பிரெஷ்ஷர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அவர்களுக்கு தேவையான பயிற்சியினையும் அளித்து வருகின்றது. புதிய புதிய தொழில் நுட்பங்கள் என்பது தொடர்ந்து அதன் உற்பத்தி திறனை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து 1,25,000 பேர் டிசிஎஸ் நிறுவனத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை அளிக்கிறது என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிகரலாபம்

டிசிஎஸ் நிகரலாபம்

டிசிஎஸ் நிறுவனத்தின் நிகரலாபம் கிட்டதட்ட 11% அதிகரித்து, 10,846 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 9806 கோடி ரூபாயாக இருந்தது. இதே இதன் ஒருங்கிணைந்த நிகர வருவாய் விகிதமானது 58,229 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் 19.11% அதிகரித்துள்ளது. இதன் நிகர வருவாய் முந்தைய ஆண்டில் 48,885 கோடி ரூபாயாக இருந்தது.

டிவிடெண்ட்

டிவிடெண்ட்

இந்த காலாண்டு அறிக்கையின் மத்தியில் 2023ம் நிதியாண்டிற்கான சிறப்பு இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 75 ரூபாயினை அறிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில்ல் இந்த பங்கின் விலையானது, 3.35% அதிகரித்து, 3319.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+