இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மீது அமெரிக்காவில் இனம் மற்றும் வயது சார்ந்து ஊழியர்களைப் பாகுபாடு செய்ததாக 22 அமெரிக்கத் தொழில் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து H-1B விசாவில் வரும் ஊழியர்களுக்கு ஆதரவாக தங்களை திடீரென்று பணி நீக்கம் செய்ததாக மொத்தம் 22 அமெரிக்கத் தொழில் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இனம் மற்றும் வயது பாகுபாடு: பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் வெள்ளையர், ஆசிய அமெரிக்கர், ஹிஸ்பானிக் அமெரிக்கர் என பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். இவர்களின் வயது 40 முதல் 60 வரை இருக்கும். அமெரிக்காவின் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் இவர்கள் வசித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வி தகுதி: பணிநீக்கம் செய்யப்பட்ட பலர் தொழில் முனைவர் பட்டம் (MBA) அல்லது அதற்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றச்சாட்டு: அமெரிக்க தொழில் வல்லுநர்களின் குற்றச்சாட்டில், தங்களைக் காட்டிலும் "குறைந்த தகுதி" கொண்ட "குறைந்த சம்பளம்" பெறும் வெளிநாட்டு ஊழியர்களால் மாற்றம் செய்யப்படுவதாக அச்சம் தெரிவித்துள்ளனர். அதோடு வயது அதிகமான ஊழியர்களைக் குறிவைத்து டிசிஎஸ் பணிநீக்கம் செய்துள்ளது. மேலும், H-1B விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஹெச்1பி விசா: H-1B விசாக்கள் திறமை வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக வழங்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இதே திறமை கொண்டவர்கள் கிடைக்கவில்லை என்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
டிசிஎஸ் மறுப்பு: ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை டிசிஎஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஹெச்1பி விசா வைத்துள்ள இந்திய ஊழியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து எவ்விதமான முறையற்ற பணிநீக்கமும் செய்யப்படவில்லை என டிசிஎஸ் கூறுகிறது.
TCS அமெரிக்க வர்த்தகம்: இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டி.சி.எஸ் நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், கிட்டத்தட்ட 50% வருவாய் வட அமெரிக்காவில் இருந்து கிடைக்கிறது. என்றாலும், அமெரிக்காவில் டி.சி.எஸ் நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை மிகக் குறைவு.
இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
TCS அறிக்கை: இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக டிசிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், "டி.சி.எஸ் நிறுவனம் சட்டவிரோதமான இன வேறுபாட்டில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை மற்றும் தவறாக வழிநடத்துபவை. அமெரிக்காவில் சம வாய்ப்பளிக்கும் வேலைவாய்ப்பு வழங்குநராக இருப்பதில் டி.சி.எஸ் நிறுவனத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. எங்கள் செயல்பாடுகளில் உயர்ந்த நேர்மை மற்றும் மதிப்பை நாங்கள் கடைப்பிடித்து வருகிறோம்" என்று டி.சி.எஸ் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிக்கல் என்ன?: அமெரிக்க ஊழியர்களின் குற்றச்சாட்டுகளை டி.சி.எஸ் மறுத்தாலும், தற்போது நிலவும் தேவை குறைவு காரணமாகச் செலவுகளைக் குறைப்பதற்கான வழிகளை உலகளவில் உள்ள பெரிய ஐடி நிறுவனங்கள் முதல் சிறிய ஐடி நிறுவனங்கள் வரையில் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவே இந்த பிரச்சனையின் அடிநாதமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
ஏன் இந்த குற்றச்சாட்டு?: தங்கள் செலவுகளைக் குறைக்க நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகளால், தாங்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அமெரிக்க ஊழியர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த அச்சமே இன மற்றும் வயது பாகுபாடு என்ற குற்றச்சாட்டிற்கு வித்திட்டுள்ளது.
அடுத்து என்ன நடக்கும்?: டி.சி.எஸ் நிறுவனத்தின் மீதான இந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் டிசிஎஸ் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பல முறை எதிர்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications