மார்ச் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 ஆக உயர்ந்துள்ளது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டிசம்பர் காலாண்டில் எப்போதும் இல்லாத வகையில் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை 2,197 குறைந்தது.
இது ஐடி ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தான் அமெரிக்கா, ஐரோப்பாவில் வங்கிகள் திவாலான நிலையில் BFSI பிரிவில் அதிக வர்த்தகத்தை கொண்டு இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கும் என கணிப்புகள் வெளியானது.

ஆனாலும் மார்ச் காலாண்டில் முந்தைய எண்ணிக்கையை காட்டிலும் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 821 அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 ஆக உயர்ந்தது. மேலும் மார்ச் காலாண்டில் டிசிஎஸ் அட்ரிஷன் அளவு 1.2 சதவீதம் குறைந்து 20.1 சதவீதமாக உள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் 1.3 லட்சம் ஊழியர்களை சேர்ந்த நிலையில், 2023 ஆம் நிதியாண்டில் வெறும் 22,600 ஊழியர்களை மட்டுமே டிசிஎஸ் சேர்த்துள்ளது. இதன் மூலம் ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கும் என்பது இதில் இருந்தே ஐடி ஊழியர்களும் தெரிந்துக்கொள்ள முடியம்.
2023 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ், 4 காலாண்டிலும் சேர்ந்து சுமார் 2.25 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 1.91 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கதது.
மேலும் 2023 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் சுமார் 42,303 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பதிவு செய்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 38,449 கோடி ரூபாயாக இருந்தது என டிசிஎஸ் இன்று மார்ச் காலாண்டு அறிக்கையை வெளியிடும் போது தெரிவித்தது.

அமெரிக்கா, ஐரோப்பாவில் வங்கிகள் திவாலான நிலையில் BFSI பிரிவில் அதிக வர்த்தகத்தை கொண்டு இருக்கும் டிசிஎஸ் காலாண்டு முடிவுகளை ஐடி ஊழியர்கள் மட்டும் இல்லாமல் ரீடைல் முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் காத்திருந்தனர்.
மார்ச் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த லாபம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 14.8 சதவீதம் அதிகரித்து 11, 436 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் மொத்த வருமானம் 16.9 சதவீதம் வளர்ச்சி அடைந்து 59,162 கோடி ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications