டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் நேற்று வெளியிட்ட 2025-26 நிதியாண்டுக்கான செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் நிதி விபரங்களை வெளியிட்டதை தாண்டி பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் அனைவரும் கவனிக்கூடிய வகையில் இருந்தது 2 விஷயம்.
1. டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்ட பெரும் சரிவு.
2. ஐடி ஊழியர்களை வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட severance pay மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய செலவு.

டிசிஎஸ் நிறுவனத்தில் 2012 ஆம் ஆண்டு ஊழியர்களின் செயல்திறன் காரணமாக 2500 பேரை பணியில் இருந்து நீக்கியது, இதை தொடர்ந்து 2வது முறையாக அதிலும் அதிக எண்ணிக்கையில் ஜூலை மாதம் 12,260 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் மூலம் செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 19,755 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.
இப்படி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 6 முதல் 2 வருடம் வரையிலான severance pay கொடுக்கப்பட்ட நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒரு முறை செலவுகள் ரூ.1,135 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த ஓன் டைம் ரீஸ்டக்சர் செலவில் பெரும் பகுதி பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான செலவு தான். இதன் மூலம் டிசஎஸ் நிர்வாகம் தொடர்ந்து நிறுவனத்தில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் திட்டத்தையும், நிர்வாக முறையை மாற்றும் பணிகளை செய்யும்.
இந்த ஓன் டைம் ரீஸ்டக்சர் செலவு மூலம் TCS-ன் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம், ரூ.12,075 கோடியாக பதிவாகியுள்ளது. இதேவேளையில் TCS-ன் இந்த காலாண்டு ஆப்ரேட்டிங் வருவாய் ரூ.65,799 கோடியாக பதிவாகியுள்ளது, இது முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 3.7 சதவீதம் உயர்வாகும். மேலும், நிலையான நாணய மதிப்பு அடிப்படையில் டிசிஎஸ்-ன் வருவாய் வளர்ச்சி 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிசிஎஸ்-ன் பணிநீக்கத்தை எதிர்த்து கடந்த சில மாதங்களாக, அகில இந்திய ஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர் சங்கம் (AIITEU), ஐடி ஊழியர் மன்றம் (FITE), மற்றும் ஐடி மற்றும் ஐடிஸ் ஊழியர் ஒன்றியம் (UNITE) போன்ற சங்கங்கள், ஐடி ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணியில் இருந்து விலக வைப்பதாகவும், அதிகளவில் ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.
இது தொடர்பாக மத்திய மாநில ஊழியர்கள் அமைச்சகங்கள் முதல் பல இடத்தில் புகார் அளித்துள்ளது. ஆயினும் டிசிஎஸ் 12000க்கும் அதிகமான ஊழியர்களை இக்காலாண்டில் குறைத்துள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் 3 மாதம் வேறு பணியில் சேர்வதற்கான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications