டிசிஎஸ் - ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. அமெரிக்க நிறுவனத்தின் புதிய ப்ராஜெட்..!

மும்பை: டிஜிட்டல் பிரிண்டிங் நிறுவனமான ஜெராக்ஸ், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி சேவைக்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளது.

இது தொடர்பாக ஜெராக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனங்களிடம் இருந்து ஐடி சேவைகளை பெறுவதற்காக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தம் பெற்றுள்ளதாகவும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் - ஹெச்சிஎல் நிறுவனத்துக்கு ஜாக்பாட்.. அமெரிக்க நிறுவனத்தின் புதிய ப்ராஜெட்..!

அமெரிக்காவின் கனெக்டிகட்டை தலைமையிடமாக கொண்டு ஜெராக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த மாதமே டிசிஎஸ் மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனங்கள் ஜெராக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக அறிவித்தன.

இதன்படி ஹெச்சிஎல் டெக் நிறுவனம் ஜெராக்ஸ் நிறுவனத்தின் 590 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி சேவை மதிப்பை பெற்றுள்ளது இது 5 ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும், அதே போல டிசிஎஸ்ஸுக்கு 490 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஐடி சேவை ஒப்பந்தம் வழங்கப்பட்டது, இது 7 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

ஜெராக்ஸ் நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜெராக்ஸ் நிருவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் 125 மில்லியன் டாலர்கள், எஸ்ஏபி நிறுவனத்திடம் 50 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தை 7 ஆண்டுகளுக்கு வழங்கி இருப்பதாக கூறியுள்ளது.

End-to-end transformation programmeக்காக ஜெராக்ஸ் நிறுவனத்திடம் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் ஜூன் மாதமே அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பை வெளியிடவில்லை. அதே போல ஹெச்சிஎல் டெக் நிறுவனமும் ஆகஸ்ட் மாதம் ஜெராக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இது 15 ஆண்டுகால ஒப்பந்தம் என கூறியது.

ஹெச்சிஎல் டெக் நிறுவனம் ஜெராக்ஸ் நிறுவனத்துக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு இணைந்த பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. ஜெராக்ஸ் நிறுவனத்தின் தற்போதைய அவுட்சோர்சிங் ஒப்பந்தம் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தோடு 2019ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இதன் மதிப்பு 1.3 பில்லியன் டாலர்கள் என்றும் 7 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியது. தற்போது அதனை நீட்டிக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அதே போல டிசிஎஸ் நிறுவனம் ஜெராக்ஸ் நிறுவனத்தின் குளோபல் ஃபைனான்சிங் மற்றும் அக்கவுண்டிங் அமைப்புக்கு தேவையான அவுட்சோர்சிங் சேவைகளை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+