100 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் பெறுவதில் முந்தும் டிசிஎஸ், இன்போசிஸ்..!

பெங்களூரு: இந்தியாவில் 100 மில்லியன் டாலர்கள் வருவாய் வழங்க கூடிய ஐடி சேவை ஒப்பந்தங்களை பெறுவதில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் முன்னிலையில் இருக்கின்றன.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பிறகு டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய இரண்டு ஐடி நிறுவனங்களும் 100 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிளைண்டுகளை அதிக எண்ணிக்கையில் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் , விப்ரோ ஆகியவை முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.

 100 மில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் பெறுவதில் முந்தும் டிசிஎஸ், இன்போசிஸ்..!

இதில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு அதிக மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெறுவதில் ஐடி நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

2023 -24 ஆம் நிதி ஆண்டின் இறுதியில் டிசிஎஸ் நிறுவனம் 100 மில்லியன் டாலருக்கு மேல் வருவாய் தரக்கூடிய 62 கிளைண்டுகளை தன் வசம் வைத்திருக்கிறது. அதே வேளையில் இன்போசிஸ் நிறுவனத்திடம் இந்த பிரிவில் சுமார் 40 நிறுவனங்கள் கிளைண்டுகளாக இருக்கின்றன.

விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் டெக் நிறுவனங்கள் தலா 22 கிளைண்டுகளைக் கொண்டிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு முந்தைய ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் 49 வாடிக்கையாளர்களையும், இன்போசிஸ் 28 வாடிக்கையாளர்களையும், விப்ரோ மற்றும் ஹெச்சிஎல் டெக் தலா 15 வாடிக்கையாளர்களையும் கொண்டிருந்தன.

அதாவது இந்த கிளைண்டுகள் இந்த நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் வருவாய் வழங்கக்கூடிய ஒப்பந்தங்களை வழங்கியுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இதில் டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை ஈர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு 100 மில்லியன் டாலருக்கும் மேல் மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெறுவது என்பது ஐடி நிறுவனங்களுக்கு மிக சவாலானதாக இருக்கிறது என இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் தற்போது டிசிஎஸ் மற்றும் இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களில் தலைமை பணிகளில் இருப்பவர்கள் இத்தகைய பெரிய அளவிலான ஒப்பந்தங்களை பெறுவதில் திறன் பெற்றவர்களாக இருக்கின்றனர் என்பது பெரிய வருகிறது.

இதற்கு முன் விப்ரோ நிறுவனம் இந்த போட்டியில் முன்னணியில் இருந்தது ஆனால் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த டெலபோர்ட்டே பெரிய ஒப்பந்தங்களை பெறுவதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் என சொல்லப்படுகிறது.

பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேக்ரோ பொருளாதாரம், உக்ரைன் ரஷ்யா சண்டை ஆகியவை காரணமாக மந்த நிலைக்கு சென்ற ஐடி நிறுவனங்கள் தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றன.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+