சமீபத்தில் ஆந்திரோபிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான டாவ் லின், 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் சூப்பர்ஹியூமன் ஏஐ வந்துவிட்டால், இந்த உலகில் மனிதர்கள் நிரந்தரமாக வேலையற்றவர்களாக இருப்பார்கள் என எச்சரித்துள்ளார்.
இதேவேளையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகள் 25 சதவீதத்திற்கு மேல் சரிந்து அதலபாதாளத்தைத் தொட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதனால் ஐடி பங்குகளின் முதலீடு செய்த முதலீட்டாளர்களும் சரி, ஐடி ஊழியர்களும் சரி, இத்துறையின் எதிர்காலத்தின் மீது பெரும் குழப்பத்திலும், அச்சத்திலும் உள்ளனர்.
டிசிஎஸ் நிலைமை என்ன..?
இந்தியப் பங்குச்சந்தையில் இன்று ஏற்பட்ட மோசமான வர்த்தகத்தில் டிசிஎஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் மேல் சரிந்ததுள்ளது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் 2.88 சதவீதமும், இரண்டு வாரங்களில் 1.52 சதவீதமும், ஒரு மாதத்தில் 2.64 சதவீதமும் சரிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் துவக்கம் முதல் கணக்கிட்டால், டிசிஎஸ் பங்கு இதுவரை 25.62 சதவீதம் சரிவில் உள்ளது.
ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
வருவாய், லாபம் ஆகியவற்றைத் தாண்டி முக்கியமாக நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 10% AI தொழில்நுட்பம் மூலம் கிடைப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் 2.6 பில்லியன் டாலராக இருந்த ஏஐ பிரிவு வருவாய், செப்டம்பர் காலாண்டில் 3.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
அடுத்தாக டிசிஎஸ் நிறுவனத்தின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் புதிதாகப் பெறப்பட்ட ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு 9.6 பில்லியன் டாலராக உள்ளது. இது முந்தைய காலாண்டில் 9.5 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் AI வருவாய் அதிகரிப்பு, புதிய ஒப்பந்தங்கள் என வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும் டிசிஎஸ் பங்கு மறுபுறம் ஏஐ தொழில்நுட்பத்தின் அச்சத்தால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீள முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கிறது.
ஆனால் நவம்பர் மாதம் அமெரிக்க மிட்டேர்ம் தேர்தலுக்குப் பின்பு ஜனநாயக கட்சியின் ஆதிக்கம் மூலம் ஏஐ கொள்கையில் புதிய மாற்றும் வரும் எனக் கணிக்கப்பட்டதால் டிசிஎஸ் பங்குகள் சிறியளவில் உயர்வைப் பதிவு செய்தது.
இன்போசிஸ் நிலைமை என்ன..?
இன்போசிஸ் பங்கு கடந்த ஒரு ஆண்டில் 25 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து முதலீட்டாளர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது என்றால் மிகையில்லை. இன்றைய வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2 சதவீதம் சரிந்து 1,107 ரூபாய் வரையில் சரிந்து இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது.
டிசிஎஸ் போலவே இன்போசிஸ் தொடர்ந்து சரிவை மட்டுமே பதிவு செய்து வருகிறது. இன்போசிஸ் பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் 5%, ஆறு மாதங்களில் 3% சரிந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதிவான 52 வார உச்ச விலையான 1,727.85 ரூபாய் அளவீட்டை ஒப்பிடுகையில் தற்போது Infosys பங்குகள் சுமார் 36% சரிவை சந்தித்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கான அட்வைஸ்
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் Monarch Networth Capital என்னும் முதலீட்டு ஆலோசனை நிறுவனம், இன்போசிஸ் பங்கு விலை மீண்டும் உயர்வடைவதற்கான தொழில்நுட்ப அறிகுறிகள் இருப்பதாகக் கூறியுள்ளது.
இன்போசிஸ் பங்குகளுக்கு ரூ.980 - 1000 ரூபாய் அளவில் நீண்ட கால சப்போர்ட் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஐடி துறைக்கான வர்த்தக சூழ்நிலை சாதகமாக இருப்பின் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் இன்போசிஸ் பங்கு விலை 1,550 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக டார்கெட் விலையை நிர்ணயித்துள்ளது.
இதனால் இந்தப் பங்குகளைப் விலை குறையக் குறைய படிப்படியாக வாங்கிச் சேர்க்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.
இதேபோல் நுவாமா இன்ஸ்டியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் 2027ஆம் நிதியாண்டின் 2வது காலாண்டுக்கான ஐடி துறை ஆய்வறிக்கையின் படி செப்டம்பர் காலாண்டில் உலகளவில் ஐடி சேவைக்கான டிமாண்ட் பெரியளவில் மேம்படவில்லை என தெரிவித்துள்ளது.
உலகளவில் நிறுவனங்கள் புதிய தொழில்நுட்ப சேவைகளுக்கான செலவுகளில் நிறுவனங்கள் தொடர்ந்து எச்சரிக்கை உடனே செய்கிறது. ஐடி நிறுவனங்கள் தற்போது ஏற்கெனவே கிடைத்துள்ள ஒப்பந்தங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதன் மூலம் தனது வருவாய், லாப அளவுகளைச் சமாளித்து வருகிறது என ஒட்டுமொத்த ஐடி துறையின் மீது ஒரு எச்சரிக்கையான பார்வையை வைத்துள்ளது.
இதனால் ஐடி பங்குகளில் முதலீடு செய்வோர் மிகுந்த எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Tamil.Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
