இந்தியா மட்டும் அல்லாமல் உலகளாவிய ஐடி சேவை துறையும் தற்போது எங்கும் AI எதிலும் AI என்ற அளவில் தான் தனது வர்த்தகத்தை நகர்த்தி வருகிறது. ஐடி சேவை நிறுவனங்கள் புதிதாக AI துறையில் வர்த்தகத்தை தேடி பிடிப்பதை ஒரு பக்கம் பிசியாக செய்துக்கொண்டு இருந்தாலும் மறுப்பக்கம் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டு சேவையாக AI துறையில் சேவை அளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் AI துறைக்கு மாற்றும் பொருட்டு இத்துறையில் திறன் வாய்ந்த ஊழியர்கள் சந்தையில் இல்லாத காரணத்தால் டிசிஎஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. OPENAI நிறுவனத்தின் பெரும் தொகையை முதலீடு செய்து தன்னுடைய அனைத்து சேவைகளிலும் AI உதவிகளை புகுத்தியுள்ளது மைக்ரோசாப்ட். இதில் Azure OpenAI-ம் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Azure OpenAI பிரிவில் போதுமான திறன்வாய்ந்த ஊழியர்களை உருவாக்கும் பொருட்டு டிசிஎஸ் மற்றும் மைக்ரோசாப்ட் இணைந்து சுமார் 25000 பேருக்கு Azure OpenAI-யில் திறன்வாய்ந்த ஊழியர்களாக உருவாக்கும் பயிற்சியை அளிக்க உள்ளது. இதவேளையில் டிசிஎஸ் மைக்ரோசாப்ட் கிளவுட் வாயிலாக இயக்கும் புதிய ஜெனரேட்டிவ் AI சேவையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் 6 லட்சம் ஊழியர்களில் 50000 பேருக்கு AI துறையில் பயிற்சி பெற்ற அதிகாரிகளாக உள்ளனர். இது மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட்-ன் AI கவுன்சில் கூட்டத்தில் டிசிஎஸ் நிறுவனம் உறுப்பினராக உள்ளது. இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தில் 25000 ஊழியர்கள் வேகமாக வளரும் AI துறையில் பயிற்சி பெரும் வாய்ப்பு கிடைக்க உள்ளது.
இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் தங்களுடைய டெக்னாலஜி வாடிக்கையாளர்கள் பெரிய திட்டங்களை ரத்து செய்ததும், தற்காலிக நிறுத்தியது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் இந்திய ஐடி துறை நிறுவனங்கள் தற்போது எதிர்கொண்டு வரும் வர்த்தக இழப்பு காரணமாக கடுமையான சவால்களையும், வருமானத்தில் நிலையற்ற தன்மையும் உருவாகி வருகிறது. இது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஊழியர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications