ரத்தகளறியான டாடா பங்குகள்.. ஆகா ஓகோன்னு இருந்த 2 பங்குகள் இப்போ படுமோசம்..!

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டிரெண்ட் ஆகியவை 2025 ஆம் ஆண்டில் தங்கள் பங்கு மதிப்பில் 25%க்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளன. இந்த சரிவின் மூலம் இந்த ஆண்டு நிஃப்டி 50 பங்குகளில் மோசமாக செயல்பட்ட 2 நிறுவனங்களாக உருவெடுத்துள்ளது.

டிசிஎஸ் சுமார் 25% சரிவை சந்தித்துள்ள நிலையில், ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைட் ஆகியவற்றை நடத்தும் ரீடைல் நிறுவனமான டிரெண்ட், ஆண்டு தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 30% இழப்பை பதிவு செய்துள்ளது. ஏன் இந்த நிலை..? இந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா..?

ரத்தகளறியான டாடா பங்குகள்.. ஆகா ஓகோன்னு இருந்த 2 பங்குகள் இப்போ படுமோசம்..!

டிசிஎஸ்-இன் மோசமான கட்டம்:
ஒரு காலத்தில் ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்ட பங்காக கருதப்பட்ட டிசிஎஸ், தற்போது 2008 உலக பொருளாதார நெருக்கடியில் அடைந்த 55% சரிவுக்குப் பிறகு மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது.

இந்த மோசமான சரிவுக்கு, நிறுவனம் சார்ந்த சிக்கல்களை விட, துறை முழுவதும் உள்ள பிரச்சினைகள் மைய காரணமாக உள்ளது. அமெரிக்க வாடிக்கையாளர்களின் ஐடி திட்டங்களுக்கான செலவுக் குறைப்பு, பொருளாதாரத்தில் உள்ள நிலையற்ற தன்மை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.

பங்கு மதிப்பீடு மற்றும் கணிப்புகள்:
இன்றைய வர்த்தக முடிவில் டிசிஎஸ் பங்குகள் 0.72 ரூபாய் குறைந்து 3057.00 ரூபாயாக சரிந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் கணக்கிட்டால் 25.66 சதவீதம் குறைந்துள்ளது. டிசிஎஸ் பங்கின் 52 வார உயர்வு என பார்த்தால் 4592.25 ரூபாயாகும். இதேபோல் இன்றைய வர்த்தகத்தில் 52 வார சரிவான 3041.20 ரூபாயை பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு கூடுதல் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ஈலாரா நிறுவனம் சமீபத்தில் டிசிஎஸ்-இன் மதிப்பீட்டை குறைத்து, 2 காலாண்டுகளாக தனிப்பட்ட செலவுகளில் தாமதம் மற்றும் ஐரோப்பிய புவியியல் அரசியல் பதற்றங்கள் தாக்கம் காரணமாக குறிப்பிட்டுள்ளது. டிசிஎஸ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட முதல் காலாண்டு (Q1) முடிவுகள் மிகவும் பலவீனமாக இருந்ததாலும், இரண்டாம் பாதி (H2) பொதுவாக மந்தமாக இருக்கும் வேளையில், 2025-26 நிதியாண்டில் வருவாய் வளர்ச்சி 2024-25-இன் ஒப்பீட்டில் மிகவும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என Elara கணித்துள்ளது.

இதைதொடர்ந்து நோமுரா நிறுவனம் தனது 2026-28 நிதியாண்டு EPS மதிப்பீட்டை 1-2% குறைத்து, டார்கெட் விலையை ரூ.3,820-இலிருந்து ரூ.3,780-ஆக குறைத்துள்ளது. இருப்பினும், ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது, பொருளாதார தடுமாற்றம் குறையும் போது டிசிஎஸ்-இன் வளர்ச்சி மேம்படும் என்று கருதுகிறது.

ரத்தகளறியான டாடா பங்குகள்.. ஆகா ஓகோன்னு இருந்த 2 பங்குகள் இப்போ படுமோசம்..!

டிரெண்ட்-இன் மோசமான நிலை:
கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 800% லாபத்தை அளித்த டிரெண்ட், 2024 முதல் பங்கு மதிப்பு செயல்பாட்டில் மோசமான கட்டத்தை எதிர்கொள்கிறது. ஜூடியோ மற்றும் வெஸ்ட்சைட் ஆகியவற்றை நடத்தும் இந்த ரீடைல் நிறுவனம், தற்போது வளர்ச்சியில் கடுமையான மந்தநிலையை சந்தித்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைந்துள்ளது.

2025-26 முதல் காலாண்டில் டிரெண்டின் வருவாய் வளர்ச்சி 20% ஆக குறைந்துள்ளது, இது 2020-25 காலக்கட்டத்தில் வருடம் 35% என்ற CAGR வருவாய் வளர்ச்சியை ஒப்பிடும்போது இது பெரிய வீழ்ச்சியாகும்.

டிரெண்ட் பங்கு மதிப்பு மற்றும் கணிப்புகள்:
இன்றைய வர்த்தக முடிவில் டிரெண்ட் பங்குகள் 0.20 ரூபாய் உயர்ந்து 5004.00 ரூபாயாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் கணக்கிட்டால் 29.20 சதவீதம் குறைந்துள்ளது. டிரெண்ட் பங்கின் 52 வார உயர்வு என பார்த்தால் 8345.00 ரூபாயாகும். இதேபோல் 52 வார சரிவு எனில் 4488.00 ரூபாயாகும்.

நுவாமா நிறுவனம் டிரெண்டை 'ஹோல்ட்' என்ற மதிப்பீட்டுக்கு குறைத்துள்ளது, இது முன்பு உயர்ந்த மதிப்பீட்டிலிருந்து மாற்றமாகும். SBC நிறுவனம் 'பை' மதிப்பீட்டை தக்க வைத்திருந்தாலும், டார்கெட் விலையை ரூ. 6,700-இலிருந்து ரூ. 6,600-ஆக குறைத்து. முதல் காலாண்டு செயல்பாடு எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருந்த காரணத்தால் டார்கெட் விலையை குறைத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+