டிசிஎஸ் கொடுத்த உற்சாகம்.. அடுத்தடுத்த அசத்தல் அறிவிப்புகள்.. கொண்டாடும் ஊழியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிகையும் கூடிக் கொண்டே வருகின்றது.

 

அரசும் கொரோனாவினைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்காக, பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

பூதாகரமாக வெடிக்கும் சிப் பற்றாக்குறை.. கார் முதல் கம்ப்யூட்டர் வரை பாதிப்பு..!

குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்கள் பலவும் ஐடி ஊழியர்களுக்கு தடுப்பூசி கேம்பினை சமீபத்தில் அறிவித்தன. இது தவிர ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, அதிரடியான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

கோவிட் கேர் திட்டம்

கோவிட் கேர் திட்டம்

அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் அதன் ஊழியர்களுக்கு தடுப்பூசி கேம்பினை சமீபத்தில் அறிவித்தது. தற்போது மேற்கொண்டு ஊழியர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு, கோவிட் -19 கேர் சேவை என்ற சலுகையினை அறிவித்துள்ளது. இதில் ஊழியர்களும், ஊழியரை சார்ந்த குடும்பத்தினருக்கும் மருத்துவம் சம்பந்தமான சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப் டெஸ்க்

ஊழியர்களுக்கு உதவும் வகையில் ஹெல்ப் டெஸ்க்

இந்த கோவிட்-19 கேர் ஊழியர்களும், அவர்களை சார்ந்திருப்பவர்களும் பயன்படுத்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு (தனிமைபடுத்தல்), 24 மணி நேரம் ஊழியர்களுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் உதவும் வகையில் ஹெல்ப் டெஸ்க் என பலவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்கள் நலமுடன் இருப்பதே நிறுவனத்தின் முன்னுரிமை என்றும் கூறியுள்ளது.

என்னென்ன சலுகைகள்?
 

என்னென்ன சலுகைகள்?

ஊழியர்கள் ஒரு வேளை தனிமைப்படுத்தப்பட்டால், அதற்கும் சம்பளம், ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய 24*7 மணி நேர ஹெல்ப் டெஸ்க், மருத்துவர்களை தொடர்பு கொள்ளவும் 24 மணி நேர சேவை, ஊழியர்களுக்கு தேவையான கவுன்சிலிங் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக டிசிஎஸ் இந்தியாவில் 11 நகரங்களில் கோவிட கேர் செண்டர்களை அமைத்துள்ளது. இது தவிர சில மருத்துவமனைகளுடன் இணைந்து, ஹோட்டல்களிலும் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இன்சூரன்ஸ் சலுகையும் உண்டு

இன்சூரன்ஸ் சலுகையும் உண்டு

இது தவிர ஊழியர்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் சலுகையும் உண்டு. இதன் மூலம் ஊழியர்களும், அவரை சார்ந்தவர்களும் அவசர மருத்துவ தேவைகளை பெற முடியும். இதன் மூலம் அவசர காலத்தில் ஏற்படும் நிதி நெருக்கடியையும் சமாளிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இது தவிர ஊழியர்களுக்கு உதவும் விதமாக கோவிட் - 19 டெஸ்ட் எடுக்கும் விதமாக, அலுவலக வளாகத்திற்குள்ளேயே கேம்பினை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விரைவில் மருத்துவ உதவி

விரைவில் மருத்துவ உதவி

ஆக இதன் மூலம் முன்னதாக கோவிட் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு விரைவில் மருத்துவ உதவிகளை செய்ய முடியும். கடந்த வாரத்திலேயே கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்பினையும் டிசிஎஸ் கொடுத்தது. இதற்காக தடுப்பூசி சப்ளையர்களிடம் நேரடியாக வாங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் ஊழியர்களுக்கும், அவரை சார்ந்தோருக்கும் போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் தடுப்பூசி கேம்ப்

டிசிஎஸ் தடுப்பூசி கேம்ப்

இதற்காக டிசிஎஸ் அலுவலகங்களில் தடுப்பூசி கேம்ப் அமைத்துள்ளதாகவும், இது தவிர சில மருத்துவமனைகளுடனும் இணைந்து செயல்படுவதாகவும் அறிவித்துள்ளது. அதோடு பல ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் டிசிஎஸ் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

உண்மையில் இது மிக நலல் விஷயமே. ஒவ்வொரு நிறுவனமும் இதேபோன்ற சேவைகளை செய்து விட்டால், பொதுமக்கள் எளிதில் பொது மருத்துவமனைகளில் எளிதில் சேவையை பெற முடியும். ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு சல்யூட் வைப்போமே.

டிசிஎஸ்ஸுக்கு சல்யூட்

டிசிஎஸ்ஸுக்கு சல்யூட்

உண்மையில் இது மிக நல்ல விஷயமே. ஒவ்வொரு நிறுவனமும் இதேபோன்ற சேவைகளை செய்து விட்டால், பொதுமக்கள் எளிதில் பொது மருத்துவமனைகளில் எளிதில் சேவையை பெற முடியும். ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் டிசிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு சல்யூட் வைப்போமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS announced covid-19 care services for employees, their family

TCS latest updates.. TCS announced covid-19 care services for employees, their family
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X