நாட்டின் முன்னணி ஐடி சேவைகளை வழங்கும் நிறுவனமான டிசிஎஸ் அதன் 2025ஆம் நிதியாண்டிற்கான செப்டம்பர் 2024 உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டு அடிப்படையில் லாபாம் 5% உயர்வை பதிவை செய்துள்ளது. தற்போது ரூ.11909 கோடியாக பதிவு செய்துள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட மதிப்பீடுகள் ரூ.12,450 கோடியை விட லாபம் குறைவு ஆகும். இதற்கிடையில், செயல்பாடுகளின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 8% அதிகரித்து ரூ.64,259 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் லாபம் முந்தைய ஆண்டின் ரூ.11,342 கோடியாக இருந்தது.
இதற்கிடையில், நிறுவனம் அதன் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.10 என்ற இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் செலுத்த வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இது நவம்பர் 5 ஆம் தேதி வழங்கப்படும். இதற்கான பதிவு தேதியை வரும் அக்டோபர் 18ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகளில் காணப்படும் எச்சரிக்கையான போக்குகள் இந்தக் காலாண்டிலும் தொடர்ந்து வெளிப்படுவதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது.

நிலையான நாணய (CC) அடிப்படையில் ஜூன்-செப்டம்பர் காலத்திற்கான வருவாய் வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 5.5% ஆக இருந்தது. காலாண்டிற்கான செயல்பாட்டு வரம்பு 24.1% ஆக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.2% சரிவு. காலாண்டில் வளர்ச்சியானது ஆற்றல், வளங்கள் மற்றும் பயன்பாடுகள் பிரிவில் 7% மற்றும் உற்பத்தி 5.3% வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
TCS CEO மற்றும் MD K கிருதிவாசன் கூறுகையில், நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், எங்களின் மிகப்பெரிய BFSI, மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டியது என்றும், எங்களது வளர்ச்சிச் சந்தைகளிலும் வலுவான செயல்திறனைக் கண்டோம். எங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிறருக்கு எங்களது மதிப்பைத் தொடர்ந்து வழங்குவதில் கவனம் செலுத்துவோம். என்று கூறியுள்ளார்.
அதேபோல், TCS CFO சமீர் செக்ஸாரியா கூறுகையில், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இந்த காலாண்டில் திறமை மற்றும் உள்கட்டமைப்பில் மூலோபாய முதலீடுகளை செய்துள்ளோம். எங்களின் ஒழுக்கமான செயல்பாடு சிறந்த பண மாற்றத்திற்கு வழிவகுத்தது. எங்களின் நீண்ட கால செலவு அமைப்பு மாறாமல் உள்ளது. மேலும் எங்களது திறனில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். தொழில்துறையில் லாபகரமான வளர்ச்சியை தொடர்ந்து வழங்கவோம் என்று கூறியுள்ளார்.
டிசிஎஸ் இரண்டாவது காலாண்டு வருவாய் அதன் ரூ.15,000 கோடி பிஎஸ்என்எல் ஒப்பந்தத்தை கொண்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் டேட்டா சென்டர்கள் மற்றும் 4ஜி தளங்களை நிறுவுதல் மற்றும் எதிர்கால 5ஜி உள்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைப்பது ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நிலை மோசமான நிலையில் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு வயதுமூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில், இன்று டிசிஎஸ் அதன் செப்டம்பர் காலாண்டு வருவாயை வெளியிட்டது. ஆனால் இதற்கான செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துள்ளது.
இதற்கிடையில், இன்று டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 0.59% சரிந்து ரூ.4227 ஆக முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications