டாடா குழுமத்தின் ராக்ஸ்டாரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2026ஆம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. இக்காலாண்டில் டிசிஎஸ்-ன் லாபம் குறைந்தாலும், வருவாய், ஏஐ பிரிவு வருவாய் ஆகியவை அதிகரித்துள்ளது.
இதேவேளையில் முதலீட்டாலர்களை தக்கவைக்கும் வரையில் டிசிஎஸ் இடைக்கால டிவிடெண்ட் தொகையும் அறிவித்துள்ளது. ஒரு பங்கிற்கு சுமார் ரூ.57 டிவிடெண்ட் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ரூ.11 மூன்றாவது இடைக்கால டிவிடெண்டாகவும், ரூ.46 சிறப்பு டிவிடெண்டாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த டிவிடெண்ட் பிப்ரவரி 3, 2026 அன்று (செவ்வாய்கிழமை) பங்குதாரர்களுக்கு செலுத்தப்படும்.

ரெக்கார்ட் தேதி
டிவிடெண்ட் பெறுவதற்கான ரெக்கார்ட் தேதியாக ஜனவரி 17, 2026 (சனிக்கிழமை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதியில் பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் மட்டுமே இந்த டிவிடெண்ட் தொகை பெற உரிமை பெறுவர். பங்குதாரர்கள் இந்த தேதிக்கு முன் பங்குகள் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
டிசிஎஸ் CEO கிரிதிவாசன் கருத்து
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநர் கே.கிருதிவாசன் இக்காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது கூறுகையில், 2026ஆம் நிதியாண்டில் 2வது காலாண்டில் கண்ட வளர்ச்சி 3வது காலாண்டிலும் பதிவாகியுள்ளது. என்றார்.
உலகின் மிகப்பெரிய AI அடிப்படையிலான தொழில்நுட்ப சேவை நிறுவனமாக மாறுவதே எங்களுடைய இலக்கு என்றும், ஐந்து தூண் உத்தியின் மூலம் இதை அடைய முயல்வதாகவும் தெரிவித்தார். AI சேவைகள் மூலம் இப்போது ஆண்டுக்கு 1.8 பில்லியன் வருவாய் ஈட்டுப்படுகின்றன என்றும், இது AI அடிப்படை கட்டமைப்பு முதல் இன்டலிஜென்ஸ் வரை முழு AI ஸ்டேக்கில் முதலீடு செய்ததன் பலன் என்றும் குறிப்பிட்டார்.
புதிய தொழிலாளர் சட்டங்களின் நிதி தாக்கம்
மேலும் டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவில் புதிய தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்ட தாக்கம் மூலம் ரூ.2,128 கோடி செலவு கூடுதலாக பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். இந்திய அரசு நவம்பர் 21, 2025 அன்று நான்கு தொழிலாளர் சட்டங்களை அறிவித்தது. இதனால் நிறுவனத்தின் செலவுகள் அதிகரித்துள்ளது.
டிசிஎஸ் பங்கு விலை இன்று வர்த்தக முடிவில் 1.10 சதவீதம் உயர்ந்து 3,243 ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications