இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் 2023 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து பல தலைமை மாற்றத்தையும், அடுத்தடுத்து பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகிறது. டிசிஎஸ் சிஇஓ-வாகக் கே.கிருதிவாசன் தலைமையேற்றிய நாளில் இருந்து வருவாய், லாபம் சிறப்பாக இருந்தாலும் கடந்த 6 மாதத்தில் வருடத்திற்கு 450 மில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக இழப்பை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கிருதிவாசன் தலைமையிலான உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் வேளையில், சில வெளியேற்றம், சில பணி நீக்கங்களுக்கு மத்தியில் தற்போது புதிதாக ஒருவருக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் TCS LeaD பிரிவின் தலைவராக எலிசபெத் மேத்யூ என்பவரை நியமித்துள்ளது. இவருடைய நியமனத்தை டிசிஎஸ் நிர்வாகம் பொது அறிக்கையாக வெளியிடாமல் இன்டர்னல் கம்யூனிகேஷன் அறிக்கையின் மூலம் இந்நிறுவன ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது.
டிசிஎஸ் ஊழியர்களுக்கான இன்டர்னல் கம்யூனிகேஷன் அறிக்கையில் இந்நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவரான மிலிந்த் லக்காட் TCS LeaD பிரிவின் தலைவராக எலிசபெத் மேத்யூ-வை நியமிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளதாக அவருடைய கையெழுத்துடன் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் LeaD என்பது மூத்த ஊழியர்கள் மட்டத்தில் பன்முகத்தன்மை மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான TCS இன் உள் நிர்வாகப் பிரிவாகும். எலிசபெத் மேத்யூ டிசிஎஸ் நிறுவனத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒரு மூத்த அதிகாரியாவார்.
பெங்களூர் அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வரும் எலிசபெத் மேத்யூ 1989 ஆம் ஆண்டு முதல் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 24 வருடத்தில் மனிதவள பிரிவில் பல தலைமை பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். எலிசபெத் மேத்யூ-வின் நியமனம், இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தலைமை நிர்வாக அதிகாரி கே.கிருதிவாசன் தலைமை ஏற்றது முதல் அவர் செய்த முக்கியத் தலைமை மாற்றங்களை இதுவும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
எலிசபெத் மேத்யூ-வின் நியமனத்தைத் தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின்
டைவெர்சிட்டி மற்றும் இன்களுஷன் பிரிவு தலைவர் ப்ரீத்தி டி'மெல்லோ மற்றும் லீடர்ஷிப் கரியர் பிரிவின் தலைவரான பிருந்தா ஆர் ஆகியோர் எலிசபெத் கீழ் பணியாற்றுவார்கள்.
முன்னதாக LeaD பிரிவை வழிநடத்தியவரும் வட அமெரிக்கா பிரிவின் HR பிரிவு தலைவராகவும் இருந்த அனந்த் ஹைடேல், டிசிஎஸ் நிறுவனத்தின் உற்பத்தி வணிகக் குழுவில் புதிய தலைமை பொறுப்பை ஏற்றுகிறார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி அலுவலகத்தில் இருந்து பணியாற்றும் அனந்த் ஹைடேல் 2007 இல் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து TCS இல் சேர்ந்தார் மற்றும் உற்பத்திப் பிரிவில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். ஹைடேல் உற்பத்தித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் வருகிறது.


Click it and Unblock the Notifications