இந்திய ஐடி சேவை துறையை மொத்தமாக புரட்டிப்போட்ட டிசிஎஸ் நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிக்கொண்டு ஊழியர்களை பணியில் அமர்த்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே புதிய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாகாமல் இருக்கும் காரணத்தால் பல பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இல்லாமல் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் லஞ்சம் வாங்கி கொண்டு வேலைவாய்ப்பை கொடுத்த புகார், அதை தொடர்ந்த விசாரணை ஆகியவற்றின் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் சுமார் 15 நிர்வாக அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதோடு, 8 staffing நிறுவனங்களை பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்காலிக ஒப்பந்த ஊழியர்களை வெளியில் இருந்து தேர்வு செய்து, ப்ராஜெக்ட்களில் பணியில் அமர்த்தும் முக்கிய வர்த்தக பிரிவான Resource Management Group-ன் தலைவர் பொறுப்பில் புதிதாக சிவகுமார் என்பவரை சிஇஓ கே கிருதிவாசன் தலைமையிலான நிர்வாகம் நியமித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 30 வருடமாக பணியாற்றி வரும் சிவகுமார் விஸ்வநாதன் என்பவரை Resource Management Group-ன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இனி இவர் தலைமையிலான குழு தான் ஒப்பந்த ஊழியர்களை வெளியில் இருந்து தேர்வு செய்து, ப்ராஜெக்ட்களில் பணியில் அமர்த்தும் முக்கிய பணியை செய்ய உள்ளது.
மேலும் டிசிஎஸ் நிர்வாகம் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்டு உள்ள 8 Staffing நிறுவனங்கள் உடன் இனி வரும் காலத்தில் எவ்விதமான வர்த்தகங்களையும் தொடர்புகளையும் வைத்துக்கொள்ளாது என்பது முக்கியமான விஷயம். மேலும் இந்த 8 Staffing நிறுவனங்கள் இனி சக போட்டி நிறுவனங்கள் உடன் பணியாற்ற முடியும் என்பதால் இது டிசிஎஸ்-க்கு பின்னடைவாக அமையலாம்.
மார்ச் மாத இறுதியில் டிசிஎஸ்-ன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,14,795 பேர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 22,600 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர், இதோடு நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் 20.1 சதவீதம். டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 11.7 லட்சம் கோடி ரூபாய்.
சிவகுமார் விஸ்வநாதன் தற்போது புதிய டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன்-க்கு மிகவும் நெருக்கமானவர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications