நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்) தனது பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும் கடந்த 2 வருடத்தில் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஆடை விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இதன் படி அசோசியேட் ஊழியர்கள் அதாவது அலுவலகத்திற்குப் புதிதாகச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் வணிக ரீதியான உடைகளை மட்டுமே அணிய வேண்டும் எனக் கட்டாய விதிமுறை விதித்துள்ளது. ஆண் ஊழியர்கள் அனைவரும் முழுக் கை சட்டையில் பேன்டில் இன் செய்து இருக்க வேண்டும். பெண்களுக்கான வணிக ரீதியான உடைகளை அணிய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இந்த ஆடை விதிமுறை திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பின்பற்ற வேண்டும் என டிசிஎஸ் அறிவித்துள்ளது. இதேபோல் டிசிஎஸ் நிர்வாகம் கேஷ்வல் ஆடைகளையும் அணிய அனுமதிக்கிறது. அரைக் கை சட்டை, சினோஸ், காக்கீஸ், டர்டில்நெக் டி சர்ட். பெண்களுக்குக் குர்தி, சல்வார் ஆகியவற்றை வெள்ளிக்கிழமை அணிய அனுமதி கொடுத்துள்ளது. மற்ற நாட்களின் ஃபார்மல் ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
2019ம் ஆண்டின் இறுதியில் உலக மக்களை அச்சுறுத்திய தொற்றுநோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததையடுத்து, டாடா கன்சன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்போசிஸ் போன்ற ஐ.டி. துறையை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது பணியாளர்களிடம் அலுவலகத்துக்கு வர வேண்டாம் வீட்டில் இருந்து பணியாற்றும்படி கூறின. அன்று முதல் ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததால் கடந்த ஆண்டு இறுதியில் ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் பணியாளர்களை அலுவலகத்துக்கு அழைக்க தொடங்கின. டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணியாளர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் டிசிஎஸ்கடந்த மாதம், வாடிக்கையாளர்களின் அழுத்தம் காரணமாக தனது நிறுவனத்தின் சில குழுக்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும் படி கூறியது. தற்போது டிசிஎஸ் நிறுவனம் தனது அனைத்து பணியாளர்களையும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும்படி தகவல் அனுப்பியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் நிறுவன பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள இமெயிலில், உலகளவில் அனைத்து தரப்பினருடனும் சரியான தாக்கத்தை உருவாக்க அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது முக்கியமானது.
அலுவலகபூர்வ பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிறைவேற்றும்போது ஆடை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த இமெயிலில் பணியாளர்களுக்கான ஆடை விதிமுறைகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் மிலிந்த் லக்காட் பேட்டி ஒன்றில், நிறுவனத்தில் தற்போது 70 சதவீத பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். புதிய பணியாளர்கள் நிறுவனத்தின் பெரிய பணியாளர்கள் அமைப்புடன் ஒருங்கிணைக்க அவர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்.
அப்போதுதான் அவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் மதிப்புகள் மற்றும் வழியை அவர்கள் கற்று புரிந்து கொள்வார்கள் மற்றும் உள்வாங்குவார்கள். எனவே வாரத்தில் எல்லா நாட்களும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த நேரத்தில் அனைவரையும் (பணியாளர்கள்) மீண்டும் அலுவலகத்துக்கு அழைப்பது நல்லது என்று நாங்கள் நம்புகிறோம். டிசிஎஸ் நிறுவனத்துக்கு இது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்தார்.
டிசிஎஸ் நிறுவனம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) நிகர லாபமாக ரூ.11,342 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 9 சதவீதம் அதிகமாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications