கொரோனாவின் வருகைக்கு பிறகு ஊழியர்கள் பணிபுரியும் சூழலில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. குறிப்பாக ஐடி துறையில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். எனினும் தற்போது நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளன.
அந்த வகையில் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனமும் வீட்டில் இருந்து பணி என்ற ஆப்சனை வழங்கி இருந்தது. தற்போது படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க தொடங்கியுள்ளது.
தற்போது மருத்துவ காரணங்களுக்காக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய விரும்பினால், அவர்கள் மருத்துவ சான்றிதழை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மருத்துவ சான்றிதழ் பெறணும்
அதற்காக டிசிஎஸ்- நியமித்த உள்மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
நியமிக்கப்பட்ட மருத்துவ குழு சரிபார்த்து இந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வது பொருந்துமா? என்பதை தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளது.
மருத்துவர்கள் பரிந்துரை
மருத்துவர்களின் பரிந்துரைபடியே, ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவர். குறைந்தபட்சம் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வராதவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவர். ஏற்கனவே சில ஊழியர்கள் மருத்துவர்களின் அனுமதி பெற்ற பிறகு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அலுவல் தேவையாக அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அலுவலகம் வரும் ஊழியர்கள்
டிசிஎஸ் நிறுவனம் ஒரு வாரத்தில் சில நாட்கள் அலுவலகங்களுக்கு திரும்பும்படி, நாங்கள் ஊழியர்களை ஊக்குவித்து வருகிறோம். ஏற்கனவே கணிசமான ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர் எனவும் டிசிஎஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மூன்றில் இருபங்கு
டிசிஎஸ் காலாண்டு அறிக்கையில் மொத்தம் 6,16,171 ஊழியர்கள் உள்ள நிலையில், மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்கின்றனர். இவர்கள் ரோஸ்டர் அடிப்படையிலான வருகையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications