முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான் இந்தியாவின் நம்பர் 1 கம்பெனியாக இருந்தது. (சந்தை மதிப்பு அடிப்படையில்).
ஆனால் இன்று ரிலையன்ஸை ஓரம் தள்ளி, கபாலி ரஜினி போல "வந்துட்டேன்னு சொல்லி, திரும்பி வந்துட்டேன்னு சொல்லி" என டயலாக் பேசாமல் முதலிடத்தைப் பிடித்து இருக்கிறது.
அது எந்த கம்பெனி? என்ன ஆச்சு? சந்தை மதிப்பு என்றல என்ன..? என எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் சந்தை மதிப்பில் இருந்து தொடங்குவோம்.
சந்தை மதிப்பு
இதை ஆங்கிலத்தில் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் என்போம். அப்படி என்றால் என்ன என்பதைப் பார்த்து விடுவோம். பங்குச் சந்தையில், பட்டியலிடப்பட்டு நிறுவனங்கள் வர்த்தகமாவதைப் பார்த்து இருப்போம். அப்படி வர்த்தகம் ஆகும் பங்குகளுக்கு ஒரு விலை இருக்கும். மொத்த பங்குகள் * ஒரு பங்கின் விலை = மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்
சுருக்கமாக சந்தை மதிப்பு
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மொத்த பங்குகளின் மதிப்பு (Market Capitalization) என ஒன்றைக் குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவன பங்கின் இன்றைய விலைக்கு, அந்த நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் விற்றால் என்ன கிடைக்குமோ அதைத் தான் மொத்த சந்தை மதிப்பு என்கிறோம்.
ரிலையன்ஸ் சரிவு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை, கடந்த 20 டிசம்பர் 2019-ல் 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் இன்று ரிலையன்ஸின் பங்கு விலை சுமாராக 1,115-ல் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ரிலையன்ஸ் பங்கு விலை உயர திணறியது என்றே சொல்லலாம். இன்று ஒரே நாளில் 166 ரூபாய் (13 சதவிகிதம்) சரிந்தது. ரிலையன்ஸின் உச்ச விலையான 1,617 ரூபாயில் இருந்து, கடந்த 3 மாத காலத்துக்குள் சுமாராக 502 ரூபாய் சரிந்து இருக்கிறது.
சந்தை மதிப்பு சரிவு
கடந்த, டிசம்பர் 2019-ல் ரிலையன்ஸின் சந்தை மதிப்பு சுமாராக 10 லட்சம் கோடி என்று வைத்துக் கொள்வோம். இப்போது 7.05 லட்சம் கோடி ரூபாய் தான் ரிலையன்ஸின் சந்தை மதிப்பாக இருக்கிறது. ஆக 10.00 - 7.05 = 2.95 லட்சம் கோடி ரூபாய் நம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு காணாமல் போய் இருக்கிறது.
நின்று விளையாடும் டிசிஎஸ்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகளும் சின்ன சின்ன விலை சரிவுகளைக் கண்டாலும், பெரிய விலை மாற்றங்களைக் காணவில்லை. எனவே டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7.40 லட்சம் கோடியாகவே இருக்கிறது. எனவே தற்போது ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி டிசிஎஸ் "இந்தியாவிலேயே அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனம்" என்கிற பட்டத்தைப் பெற்று இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications