இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், இன்று உலகின் முதன்மை ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி நிறுவனம், பிஎஸ்இ சந்தையில் அதன் சந்தை மூலதனம் இன்று 170 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

எனினும் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று 11.80 ரூபாய் குறைந்து 3,291.30 ரூபாயாக குறைந்துள்ளது. எனினும் இன்றைய உச்சம் 3.339 ரூபாயாகும். இதே இன்றைய குறைந்தபட்ச விலையானது 3,278.65 ரூபாயாகும்.

டிசிஎஸ் Vs அசெஞ்சர்

டிசிஎஸ் Vs அசெஞ்சர்

அமெரிக்காவின் முன்னணி ஐடி நிறுவனமான அசெஞ்சரின் மதிப்பினை விட, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி நியூயார்க் பங்கு சந்தையில் அசெஞ்சரின் சந்தை மூலதனம் 168 பில்லியன் டாலராக உள்ளது. இதே டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 170 பில்லியன் டாலராகும். எனினும் பிறபகலுக்கு பிறகு டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது வீழ்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடைவெளி குறைவு தான்

இடைவெளி குறைவு தான்

உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது சற்று குறைந்திருந்தாலும், தற்போது உலக நிறுவனங்களுடனான மதிப்புகளுடன் ஒப்பிடும்போது உள்ள இடைவெளியானது மிக குறைவாகத் தான் உள்ளது. ஆக மீண்டும் இது விரைவில் அதிகரிக்கலாம். இதே இந்திய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது வழக்கம்போல டிசிஎஸ் தான் முதன்மை ஐடி நிறுவனமாக உள்ளது.

மற்ற இந்திய நிறுவனங்கள்

மற்ற இந்திய நிறுவனங்கள்

டிசிஎஸ் உடன் ஒப்பிடும்போது, மற்ற இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மூலதனமானது பாதியளவு கூட இல்லை எனலாம். குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 78 பில்லியன் டாலராகும். இதே ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்-சின் சந்தை மூலதனம் 36 பில்லியன் டாலராகும், இதே விப்ரோவின் சந்தை மூலதனம் 33 பில்லியன் டாலராகும், டெக் மகேந்திராவின் சந்தை மூலதனம் 13 பில்லியன் டாலராகவும் உள்ளது.

டிசிஎஸ் பங்கு ஏற்றம்

டிசிஎஸ் பங்கு ஏற்றம்

கடந்த மார்ச் 2020ல் இருந்து கொரோனா தாக்கம் ஒரு புறம் இருந்தாலும், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 82%-க்கும் அதிகமாக ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டிகளில் டிசம்பர் காலாண்டில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாக கருதப்படும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இந்த பங்கின் விலையானது கணிசமான ஏற்றம் கண்டுள்ளது கவனிக்கதக்கது.

பங்குகளை வாங்க பரிந்துரை

பங்குகளை வாங்க பரிந்துரை

இதனையடுத்து பல புரோக்கிங் நிறுவனங்கள், டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது வலுவான ஏற்றத்தினை காணலாம் என்று கணித்து வருகின்றன. குறிப்பாக ஜியோஜித் பிஎன்பி பாரிபஸ், ஆக்ஸிஸ் டேரக்ட், Prabhudas Liladher உள்ளிட்ட தரகு நிறுவனங்கள் வாங்க பரிந்துரைத்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+