டிசம்பர் காலாண்டு முடிந்த நிலையில் ஒவ்வொரு நிறுவனமாகத் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. வழக்கம் போல் இந்த முறையும் காலாண்டு முடிவுகளை நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வெளியிட்டு ஆட்டத்தைத் துவங்கியுள்ளது.
2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டில் அனைத்துத் துறை நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் இந்த வருடம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்
டாடா குழுமத்தில் அதிகம் லாபம் தரும் நிறுவனமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாகவும் விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தை விடவும் அதிக லாபமும், லாபத்தில் வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது.
டிசிஎஸ் லாபம்
2022ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் கடந்த ஆண்டி டிசம்பர் காலாண்டை விடவும் 12.3 சதவீதம் அதிக லாபத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 8,701 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்த ஆண்டு 9,769 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
டிசிஎஸ் வருவாய்
இதேபோல் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 42,015 கோடி ரூபாய் பெற்ற நிலையில் தற்போது 48,885 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
டிசிஎஸ் ஈவுத்தொகை
மேலும் இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு பங்குகிற்கு 7 ரூபாய் ஈவுத்தொகை அறிவித்துள்ளது.
இந்த ஈவுத்தொகை அளிப்பதற்கு பதிவு செய்யப்பட்ட நாளாக ஜனவரி 20-ஐ நிர்ணயம் செய்து பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் ஈவுத்தொகையை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது டிசிஎஸ்.
18,000 கோடி ரூபாய் பைபேக் திட்டம்
இக்காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 18,000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்குப் பங்குகளைப் பைபேக் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 16.67 சதவீத ப்ரீமியம் விலையில் ஒரு பங்கை 4500 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது டிசிஎஸ்.
58 வாடிக்கையாளர்கள்
மேலும் இக்காலாண்டில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 100 மில்லியன் டாலர் பிரிவில் 10 புதிய வாடிக்கையாளர்களையும், 50 மில்லியன் டாலர் பிரிவில் 21 வாடிக்கையாளர்கள் என மொத்தம் 58 வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications