மும்பை: நாட்டின் முன்னணி சாப்ட்வேர் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் ஒரு புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
கடந்த வியழாக்கிழமை நிலவரப்படி, அதன் சந்தை மதிப்பின் அடிப்படையில், அதிக மதிப்புடைய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இது அதன் போட்டி நிறுவனமான அசென்சரையே விஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசிஎஸ் சந்தை மதிப்பு
வியாழக்கிழமையன்று சந்தை முடிவில் டிசிஎஸ் நிறுவன பங்கின் விலையானது 3.19% அதிகரித்து 2,825 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் இதன் சந்தை மதிப்பானது 144.73 பில்லியன் டாலர் மற்றும் 10.6 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே அசென்சரின் தற்போதைய மதிப்பானது 143.4 பில்லியன் டாலர் அல்லது 10.52 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.
அபார வளர்ச்சிக்கு என்ன காரணம்?
இதே மற்றொரு ஐடி ஜாம்பவான் ஆன ஐபிஎம்மின் சந்தை மதிப்பானது 118.2 பில்லியன் டாலராகவும் (8.67 டிரில்லியன் ரூபாயாகவும்) உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அபார வளர்ச்சியானது, இந்த நிறுவனம் செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்குவதாக கூறிய நிலையில் ஏற்றம் கண்டுள்ளது. அதோடு இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 12 ரூபாய் கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் & கிளவுட் வணிகம்
டிசிஎஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு வருவாயானது 3% அதிகரித்து, 40,135 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்கள் அதிகளவிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று நோய் காரணமாக சர்வதேச வாடிக்கையாளர் டிஜிட்டல் மற்றும் கிளவுட் வணிகத்திற்கு மாறியுள்னர் என்றும், இதுவும் இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்புக்கு துணை புரிந்ததாகவும் டிசிஎஸ் நிறுவனம் கூறியுள்ளது.
குறிப்பாக இரண்டாவது காலாண்டில் மட்டும் 8.6 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் விரிவுபடுத்தலாம்
கடந்த காலாண்டோடு ஒப்பிடும்போது டிசிஎஸ் நிறுவனத்தின் மேம்பட்ட செயல்திறனே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக
பி எஃப் எஸ் ஐ மற்றும் சில்லறை வர்த்தகம் மற்றும் சிபிஜி, லைஃப் சையின்ஸ் உள்ளிட்ட துறையிலும் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு தற்போது ஐரோப்பா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் இந்த நிறுவனம் அதன் சந்தை பங்கினை விரிபடுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications