டிசிஎஸ் ஊழியர்கள் பீதி.. எப்போ வேலையை விட்டு தூக்குவாங்களோ..? யாருக்கெல்லாம் பிரச்சனை..?

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் சமீபத்தில் புதிய பெஞ்ச் கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கொள்கையின் படி ஒரு வருடத்தில் 35 நாள் ப்ராஜெட் இல்லாமல் ஒருவர் பென்சில் இருந்தால் அந்த ஊழியருக்கு பதவி குறைப்பு அல்லது பணியில் இருந்து நீக்கப்படுவார் என அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொண்டு ப்ராஜெக்ட்-க்குள் நுழையும் முயற்சியை தீவிரமாக துவங்கினர். இந்தி நிலையில் டிசிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டு முதல் 35 நாள் சுழற்சி இன்று (ஜூலை 17) முடிவடைகிறது. இதனால் பெஞ்சில் (bench) உள்ள ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் அச்சத்துடன் உள்ளனர்.

டிசிஎஸ் ஊழியர்கள் பீதி.. எப்போ வேலையை விட்டு தூக்குவாங்களோ..? யாருக்கெல்லாம் பிரச்சனை..?

மேலும் டிசிஎஸ் நிறுவன தரப்பில் எத்தனை பேர் இன்று பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றோ, 35 நாட்கள் கொடுத்து ப்ராஜெக்ட்-ல் சேராத ஊழியர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தோ அறிவிக்கவில்லை. இந்த மொனமும் டிசிஎஸ்-ன் பென்ச் ஊழியர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது.

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய பென்ச் கொள்கை ஜூன் 12-ஆம் தேதி முதல் இந்நிறுவனத்தில் அமலாக்கம் செய்யப்பட்டது. இந்த பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்து பல அமைப்புகள் டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளது.

நேற்று புதன்கிழமை (ஜூலை 16), ஐடி ஊழியர் நல அமைப்பான நேசன்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்பிலோயி செனேட் (NITES) மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் TCS-இன் பெஞ்ச் கொள்கைக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தது.

இந்த அமைப்பு இந்த கொள்கையை "மனிதாபிமானமற்றது", "ஊழியர்களை சுரண்டுவது" மற்றும் IT தொழிலாளர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக NITES அமைப்பு மத்திய அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

NITES எழுதியுள்ள கடிதத்தில், TCS பெஞ்சில் உள்ள ஊழியர்களை 35 நாட்கள் காலக்கெடுக்குள் ப்ராஜெக்ட்-ல் சேராவிட்டால் பணிநீக்க செய்யப்படுவதாக மிரட்டுவதாகவும், ஊழியர்களுக்கு அனுபவக் கடிதங்களை அளிக்க மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் 35 நாட்கள் பென்ச் கொள்கை குறித்து உங்களின் கருத்து என்ன..? கமெண்ட் பண்ணுங்க

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+