இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் 70 சதவீத ஊழியர்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகை கிப்ட் ஆக 20 சதவீத சம்பள உயர்வை வழங்கு முடிவு செய்துள்ளது.
மேலும் மீதமுள்ள டிசிஎஸ் ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சம்பள உயர்வு வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிறுவன ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 20 சதவீதம் வரையிலான தொகை வேரியபிள் பே ஊதியத்தைச் சார்ந்துள்ளது. 2022 நிதியாண்டில் 4 லட்சம் ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே தொகையை வழங்க டிசிஎஸ் திட்டமிட்டு இருந்தது.
டிசிஎஸ்
தற்போது, டிசிஎஸ் தனது ஊழியர்களுக்கு 100% வேரியபிள் பே தொகையை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. செப்டம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 8% உயர்ந்து, 10,431 கோடி ரூபாயை பெற்றது, இதன் மூலம் முதல் முறையாக 10000 கோடி ரூபாய் அளவீட்டை டிசிஎஸ் எட்டியது.
மிலிந்த் லக்காட்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட போது 70 சதவீத ஊழியர்களுக்கு 100 சதவீதம் வோரியபிள் பே வழங்க உள்ளோம். மீதமுள்ள 30 சதவீத ஊழியர்களுக்கு அவர்களின் செயல்திறன் அடிப்படையில் வேரியபிள் பே ஊதியம் வழங்கப்படும். இது நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டுக்கானது (ஜூலை-செப்டம்பர்) என விளக்கம் கொடுத்தார்.
விப்ரோ மற்றும் இன்போசிஸ்
டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ மற்றும் இன்போசிஸ் ஆகியவை முதல் காலாண்டில் டிசிஎஸ் செய்ததைப் போலவே தங்கள் ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையைக் குறைத்தது.
100 சதவீதம் வேரியபிள் பே
இதன் பின்பு அனைத்து நிறுவனங்களும் 100 சதவீதம் வேரியபிள் பே தொகை அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் அதன் 70% ஊழியர்களுக்குக் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி 20 சதவீத சம்பள உயர்வை வழங்குகிறது.
616,171 ஊழியர்கள்
செப்டம்பர் 30, 2022 இல் டிசிஎஸ் தனது காலாண்டு முடிவுகளின் தரவு படி இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 616,171 ஆக இருந்தது, இக்காலாண்டில் மட்டும் புதிதாகச் சுமார் 9,840 ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்தது.
157 நாடுகளை
டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 157 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பணியாற்றி வருகிறார்கள். மேலும் மொத்த ஊழியர்களில் சுமார் 35.7 சதவீதம் பேர் பெண்களை முழு நேர ஊழியர்களாகக் கொண்டு உள்ளது.
அட்ரிஷன் விகிதம்
செப்டம்பர் 2022 காலாண்டில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் அதன் அட்ரிஷன் விகிதம் 21.5 சதவீதமாக இருந்தது, இது முந்தைய காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 19.7 சதவீதத்தை விட அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டில் இதே அட்ரிஷன் விகிதம் 17.4 சதவீதமாக இருந்தது.
More From GoodReturns

கோடிகளில் புரளும் கோலிவுட்! சூப்பர் ஸ்டார் vs தளபதி - இந்தியாவின் காஸ்ட்லி நடிகர் யார்?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications