டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. மார்ச் காலாண்டில் நிகர லாபம் 1.7 சதவீதம் குறைந்து ரூ.12,224 கோடியாக உள்ளது, ஆனால் ஆப்ரேட்டிங் வருவாய் 5.3% அதிகரித்து ரூ.64,479 கோடியை எட்டியுள்ளது. வருவாய் அதிகரித்துக் காணப்பட்டாலும் லாபம் குறைந்துள்ளது முதலீட்டாளர்களின் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையைச் சமாளிக்க முதலீட்டாளர்களைக் கவர முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இறுதி டிவிடெண்ட் ஆக ஒரு பங்குக்கு 30 ரூபாய் வழங்கப் பரிந்துரைத்துள்ளது. இந்த டிவிடெண்ட், நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்குப் பின்பு உறுதி செய்யப்படும்.

இதன் மூலம் ஒரு நாள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படும் பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவைக் கட்டுப்படுத்த முடியும். இதேபோல் இந்த டிவிடென்ட் தொகை மூலம் டாடா சன்ஸ் நிர்வாகம் பெரும் தொகையைப் பெற உள்ளது.
மேலும், டிசிஎஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், புதிய ஒப்பந்தங்கள் மூலம் 12.2 பில்லியன் டாலர் மதிப்பிலான வருவாயை ஈட்டியுள்ளது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றில் ஒரு காலாண்டில் பெறப்பட்ட அதிகபட்ச ஒப்பந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசிஎஸ்-ன் புக்-டு-பில் விகிதம் வலுவாக 1.6 அளவில் உயர்ந்துள்ளது.
இதோடு முழு நிதியாண்டிற்கான மொத்த புதிய ஒப்பந்த மதிப்பு 39.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது எனவும் டிசிஎஸ் நிர்வாகம் தனது நிதியியல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான கே. கிருதிவாசன் இந்த சாதனை குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
கே. கிருதிவாசன் கூறுகையில், "வருடாந்திர வருவாயில் 30 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டியதுடன், தொடர்ந்து இரண்டாவது காலாண்டிலும் அதிகப்படியான ஆர்டர்களை பெற்றுள்ள மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் தனது பங்குதாரர்களுக்கு 44,962 கோடி ரூபாய் அளவிலான டிவிடெண்ட் தொகையை வழங்கியுள்ளது. கடந்த பன்னிரண்டு மாதங்களில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற விகிதம் 13.3% ஆக பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்திற்கு எப்போதும் போல வட அமெரிக்கா வணிகம் நான்காவது காலாண்டில் மொத்த வருவாயில் 48.2% பங்களித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 50% பங்களிப்பை விட 1.9 சதவீத புள்ளிகள் குறைவு ஆகும். இதை தொடர்ந்து பிரிட்டன் வணிகம் 1.2% வருடாந்திர வளர்ச்சி கண்டு, நிறுவனத்தின் மொத்த வணிகத்தில் 16.8% பங்கீட்டை கொண்டுள்ளது.
அனைத்தையும் விட முக்கியமாக டிசிஎஸ் நிறுவனத்தின் இந்திய வணிகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இக்காலாண்டில் பதிவு செய்து, 33% உயர்ந்து மொத்த வருவாயில் 8.4% பங்களித்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications