அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதில் பிஸியாக உள்ளது. ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப பல்வேறு காரணங்களைத் தேடி வரும் நிறுவனங்கள் மத்தியில், டிசிஎஸ் தேடி தேடித் இந்திய ஊழியர்களைப் பணியில் சேர்த்து வருகிறது.
ஊழியர்களின் கடந்த காலச் செயல்பாடுகளைக் கருத்தில் கொள்ளாமல், இந்தப் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என ஊழியர்கள் தரப்பில் புலம்பல் இருந்தாலும், நிறுவனங்கள் அதிகளவில் ரெசிஷனில் மாட்டி நிறுவனத்தை மூடும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது என்ற ஓரே விஷயத்திற்காகப் போராடி வருகிறது.
அமெரிக்க நிறுவனங்களின் பணிநீக்கத்தில் அதிகளவிலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டது மறக்க முடியாத ஒன்றாக உள்ளது.
டாடா நிறுவனத்தின் நம்பிக்கை
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) ஒரு பணியாளரை பணியமர்த்தியவுடன், நீண்ட கால நோக்கில் அவருடைய வேலைக்கான திறமைகளை வளர்ப்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றது. எனவே நாங்கள் ஒரு பொழுதும் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உடனடி வேலை
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மென்பொருள் ஏற்றுமதியாளராக இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தில், வேலையிழந்த டெக் ஊழியர்களையும் பணியமர்த்தப் போகின்றோம் என்று அதன் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இந்திய ஊழியர்கள்
அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் அதிகளவில் பணிநீக்கத்தில் பாதிக்கப்பட்டு உள்ள வேலையில் டிசிஎஸ் இவர்களைப் பணியமர்த்தும் முடிவை எடுத்துள்ளது. அமெரிக்க டெக் நிறுவனங்களில் வேலை இழந்தவர்கள் விசா விதிமுறைகள் படி 60 நாட்களுக்குள் புதிய வேலைவாய்ப்பை தேடிக்கொள்ளாவிட்டால் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்தியர்களுக்கு வாய்ப்பு
தற்போது, டிசிஎஸ் நிறுவனத்தின் அமெரிக்க அலுவலகத்தில் மொத்த ஊழியர்களில் 70 சதவீதம் பேர் அமெரிக்கர்கள், இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு உலகளாவிய வாய்ப்புகளை வழங்க விரும்புவதால், எண்ணிக்கையை 50 சதவீதமாகக் குறைக்க விரும்புவதாக லக்காட் கூறினார்.
ஹெச்1பி, எல்1 விசா
இதேவேளையில் அமெரிக்காவில் தற்போது ஹெச்1பி, எல்1 விசாவில் இருந்து பணிநீக்கத்தை எதிர்கொண்ட இந்திய ஊழியர்களுக்கு டிசிஎஸ் கதவை திறந்து வைத்துள்ளது.இது பல ஆயிரம் இந்திய ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது, இந்த வாய்ப்பு மூலம் இந்தியாவுக்குத் திரும்பி வருவதைத் தவிர்க்க முடியும்.
டெக் நிறுவனங்கள்
உலகளவில் மிகப் பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்கள் அனைத்தும் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இந்த வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது
ஒருகாலமும் அதைச் செய்ய மாட்டோம் "நாங்கள் பணிநீக்கத்தைச் செய்ய மாட்டோம், நிறுவனத்தில் திறமையை வளர்ப்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்...இதனால் பணிநீக்கம் இருக்காது" என்று லக்காட் கூறினார்.
அளவுக்கு அதிகமான ஊழியர்கள்
அமெரிக்க டெக் நிறுவனங்களின் தற்போதைய பணிநீக்கத்திற்குப் பல நிறுவனங்கள் தங்களின் உண்மையான தேவையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது.இதனால் பணிநீக்க நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக மேலும் அவர் கூறினார்.
எச்சரிக்கை உடன் செயல்பாடு
அதே நேரத்தில் ஒரு ஊழியர் தங்களுடைய நிறுவனத்தில் இணைந்தவுடன் மிகவும் எச்சரிக்கையாக அவர்களை உற்பத்தி சார்ந்து வடிவமைப்பதில் டிசிஎஸ் மிகவும் கவனமுடன் செயல்படுகின்றது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
திறன் மேம்பாடு
தங்களுடைய நிறுவனத்தில் பணிபுரிய தேவைப்படும் திறன்கள் மற்றும் ஒரு ஊழியருக்கு இருக்கும் திறன்கள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் கண்டறியும் பொருட்டு அந்தப் பணியாளருக்கு அதிக நேரத்தைக் கொடுத்துப் பயிற்சியளிப்பதில் டிசிஎஸ் நிறுவனம் கவனம் செலுத்துகிறது லக்காட் மேலும் கூறினார்.
தேடிக் கண்டுகொண்டோம்
6 லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரியும் நிறுவனம், தனது முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஊழியர்கள் எண்ணிக்கையில் உயர்வை அறிவிக்கும் என்றார் மிலிந்த் லக்கார்ட்.
குறிப்பாகக் கல்வி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் செயல்பட்டு வந்த ஸ்டார்ட்அப்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் TCS நிறுவனம் பணியமர்த்துவதில் முன்னுரிமை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் எண்ணிக்கை
டிசம்பர் காலாண்டில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 2,000க்கும் அதிகமான பணியாளர்கள் குறைந்துள்ளனரா என்ற கேள்விக்கு, மார்ச் காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்குமா அல்லது சரிவுடன் தொடருமா என்பதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
டிசம்பர் காலாண்டு
ஜனவரி 9 ஆம் தேதி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வெளியிட்ட காலாண்டு முடிவுகள் படி இந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை டிசம்பர் 31 ஆம் தேதி முடிவில் 6,16,171ல் இருந்து 6,13,974 ஆகக் குறைந்துள்ளது. டிசிஎஸ் செப்டம்பர் காலாண்டில் 9840 ஊழியர்களைப் பணியில் சேர்த்தது, ஆனால் 3வது காலாண்டில் 2,197 பேர் குறைந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 28,238 ஊழியர்களைச் சேர்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications