இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம், தனது ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதம் வழங்க திட்டமிட்டிருந்த சம்பள உயர்வை ஒத்திவைத்துள்ளது. இந்த அறிவிப்பு, வியாழக்கிழமை மார்ச் காலாண்டு முடிவுகளையும், 2024-25ஆம் நிதியாண்டுக்கான முடிவுகளையும் வெளியிடும் போது செய்தியாளர் சந்திப்பில் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இதை தெரிவித்தனர்.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையேயான தொடர்ச்சியான வர்த்தகப் போர் காரணமாக அதிகரித்துள்ள உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலையே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்திய ஐடி சேவைத் துறையைப் பாதிக்கும் விஷயங்கள் அதிகம் செய்து வருகிறார்.

முதலில் விசா கட்டுப்பாடுகள், கிரீன் கார்டு பிரச்சனை, இதைத் தொடர்ந்து தற்போது ரெசிப்ரோக்கல் வரி விதிப்பு, சீனா உடன் வர்த்தக போர் என அமெரிக்கா வர்த்தகத்தையும், அமெரிக்காவில் அதிகம் வருமானம் ஈட்டும் இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஐடி சேவைத் துறைக்கு அமெரிக்கச் சந்தையில் இருந்து புதிய வர்த்தகம் கிடைப்பது என்பது கடினமான விஷயமாக இருக்கும். ஏற்கனவே அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரெசிஷன் அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்த நிலையில் பொருளாதார நிலைமை தெளிவடையும் வரை, ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் அளிக்கப்படும் என்று டிசிஎஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் இதுகுறித்து கூறுகையில், இந்த ஆண்டு சம்பள உயர்வு எப்போது வழங்கப்படும் என்பது குறித்து இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றுக்காலத்தில் உலகளாவிய வணிகம் முடங்கியபோதும் எடுக்கப்பட்ட இதேபோன்ற முடிவு போல் உள்ளது. தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் நிலவும் மோசமான சூழ்நிலையும் டிசிஎஸ்-ன் முடிவு காட்டுகிறது.
இதேவேளையில் ஐடி சேவைத் துறையில் உள்ள நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தையும், வளர்ச்சியையும் காட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
இந்திய ஐடி சேவை துறையில் மாபெரும் நிறுவனமாக இருக்கும் டிசிஎஸ் எடுத்திருக்கும் இத்தகைய முடிவு இதன் போட்டியாளர்களான இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களையும் இதேபோன்ற முடிவை எடுக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. அடுத்த வாரம் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களும் தங்களுடைய நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன.
டிசிஎஸ் நிர்வாகம் சம்பள உயர்வை ஒத்திவைத்தாலும், காலாண்டு போனஸ் அதாவது வேரியபிள் பே தொகையைத் தொடர்ந்து அளிக்க டிசிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நான்காவது காலாண்டில், ஊழியர்களில் 70 சதவீதம் ஊழியர்கள் தங்களுடைய வேரியபிள் பே தொகையில் முழுவதையும் பெறுவார்கள். மீதமுள்ள ஊழியர்களின் வணிக செயல்திறனைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications