இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), நேற்று தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. மார்ச் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தையில் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பில்லியன் டாலர் கேள்வியாக இருந்தாலும்.
டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த ஒரு அறிவிப்பு அதன் ஊழியர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. இதை விட முக்கியமாக டிசிஎஸ் அறிவிப்பால் பிற ஐடி நிறுவனங்களும் இதைப் பாலோ செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு வருட இறுதியிலும் ஐடி ஊழியர்கள் காத்திருக்கும் தருணம் தான் இது, வருடாந்திர சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டு அதன் ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே வேளையில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது.
நாட்டின் பிற ஐடி நிறுவனங்களைப் போல் அல்லாமல் ஒவ்வொரு வருடமும் டிசிஎஸ் நிர்வாகம் அதன் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளித்து வரும் வேளையில் இந்த வருடமும் டாப் பர்பாமென்ஸ் ஊழியர்களுக்கு 2 இலக்கு சம்பள உயர்வையும், பிற ஊழியர்களுக்கான சம்பள உயர்வை ஏப்ரல் மாதம் முதல் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்கட் இது குறித்துக் கூறுகையில், "ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் செய்து வருவதுபோல், இந்த ஆண்டும் எங்கள் ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். டாப் பர்பாமென்ஸ் ஊழியர்கள் 2 இலக்கு சம்பள உயர்வைப் பெறுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
லக்கட் அவர்களின் தகவல்படி, டாப் பர்பாமென்ஸ் ஊழியர்களுக்குத் தவிர்த்துப் பிற ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் 4.5% முதல் 7% வரை இருக்கும். மேலும் இந்த ஆண்டு சுமார் 40,000 பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்த நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. இதில் பெரும்பாலானோர் முந்தைய நிதியாண்டின் சுழற்சிகளிலிருந்து ஏற்கனவே பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் மிலிந்த் லக்கட் தெரிவித்துள்ளார்.
கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியமர்த்தல் குறைந்திருப்பது ஐடி ஊழியர்கள் மத்தியில் முக்கிய கவலையாக உள்ளது. இந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை 1,759 குறைந்து, மொத்தமாக ஊழியர்களின் எண்ணிக்கை 601,546 ஆக உள்ளது.
இது செப்டம்பர் காலாண்டில் ஊழியர் எண்ணிக்கை 5,680 ஆக குறைந்ததைத் தொடர்ந்து தற்போது 1759 பேர் குறைந்துள்ளனர். இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் ஊழியர்கள் எண்ணிக்கையில் 13,249 பேர் குறைந்துள்ளனர், ஆனாலும் வருவாய் 3.5% வளர்ச்சியைக் கண்டுள்ளது.
திறமைமிக்க ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும், சிறந்த திறமை படைத்த புதிய பட்டதாரிகளை ஈர்ப்பதற்காகவும் நிறுவனங்கள் சம்பள உயர்வு போன்ற சலுகைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதேபோல் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் ஏற்பட்டு உள்ள வளர்ச்சி அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications