இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் ஜூலை முதல் வாரத்தில் அளிக்க வேண்டிய ஊதிய உயர்வை கடிதத்தை இதுவரையில் வெளியிடாமல் இருக்கும் காரணத்தால், இந்த வருடத்திற்கான சம்பள உயர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் வந்தது.
இந்த நிலையில் இன்று ஜூன் காலாண்டு முடிவுகள் முதல் ஐடி நிறுவனமாக வெளியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் மற்றும் மாபெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்த வருடத்திற்கான சம்பள உயர்வை அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

இதன் மூலம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் 200 அடிப்படை புள்ளிகள் பாதிப்பு ஏற்பட்டாலும் ஊழியர்கள் நலன் கருதி சம்பள உயர்வை அளிப்பதாக இன்று ஜூன் காலாண்டு முடிவை வெளியிடும் போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்கள் நிறுவன ஊழியர்களுக்கான வருடாந்திர சம்பள உயர்வை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம். இதன் மூலம் எங்களின் ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவில் 200 அடிப்படை புள்ளிகள் பாதிப்பு ஏற்பட்டு 23.2% ஆக உள்ளது.

இந்த இழப்பை ஊழியர்களின் செயல்திறன் அதிகரிப்பு மூலம் ஈடுசெய்ய முடிவு செய்துள்ளோம் என TCS நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான சமீர் செக்ஸாரியா தெரிவித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனம் சமீபத்திய வருடாந்திர சம்பள உயர்வு மதிப்பாய்வில் சுமார் 12-15 சதவீத சம்பள உயர்வை சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் பதவி உயர்வும் அளிக்கப்பட்டு உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் அளவுகள் ஜூன் காலாண்டில் குறைந்தாலும் இன்னும் பாதுகாப்பான நிலைக்கு வரவில்லை, ஜூன் காலாண்டு உடன் முடிவடைந்த 12 மாதத்தில் டிசிஎஸ்-ன் அட்ரிஷன் அளவு 17.8 சதவீதமாக உள்ளது. இது மார்ச் காலாண்டில் 20.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 30 ஆம் தேதி முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,15,318 பேர். ஜூன் காலாண்டில் கூடுதலாக வெறும் 523 பேரை மட்டுமே டிசிஎஸ் பணியில் சேர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 154 நாடுகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள், இதில் 35.8 சதவீதம் பேர் பெண்கள் ஊழியர்கள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது.


Click it and Unblock the Notifications