இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் திட்டமிட்டப்படி மாபெரும் பைபேக் திட்டத்தை அறிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக ஐடி முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளாக இருந்தது டிசிஎஸ் நிறுவனத்தின் பைபேக் திட்டம் தான்.
இன்று டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்ட காலாண்டு முடிவுகளின் போது டிசிஸ் நிர்வாகம் முன்னிலையில் இன்று காலை வைக்கப்பட்ட 17000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்திற்கு நிர்வாகம் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. டிசிஎஸ் நிர்வாகம் சந்தையில் இருக்கும் பங்குகளை 4150 ரூபாய் என்ற விலைக்கு வாங்க உள்ளதாக காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் ஐந்தாவது பைபேக் திட்டத்தை இன்று செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியீட்டில் அறிவித்துள்ளது. டிசிஎஸ் கடந்த 6 வருடத்தில் அறிவித்த 4 பைபேக் திட்டத்தின் மூலம் சுமார் 66000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை சந்தையில் இருந்து திரும்ப பெற்றுள்ளது. இப்புதிய அறிவிப்பில் 17000 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.
டிசிஎஸ் நிர்வாகம் இந்த முறையும் 2022 ஆம் ஆண்டு போல் 18000 கோடி ரூபாய் மதிப்பிலான பைபேக் திட்டத்தை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது, இதேபோல் இந்த தொகை 25000 கோடி ரூபாய் வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதேபோல் 2017 முதல் டிசிஎஸ் பைபேக் அறிவிக்கும் முன்பு டிசிஎஸ் பங்குகள் 4 முறையும் உயர்ந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் டிசிஎஸ் பங்குகள் 0.52 சதவீதம் சரிந்து 3610.20 ரூபாய் அளவில் முடிந்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக ஈவுத்தொகை, பைபேக் திட்டம் போன்றவற்றை அறிவித்துள்ள காரணத்தால் டிசிஎஸ் பங்குகள் நாளைய வர்த்தகத்தில் கூடுதலான முதலீட்டுகளை பெறும் என நம்பப்படுகிறது.
டிசிஎஸ் பங்குகள் கடந்த 5 நாட்களில் 1.40 சதவீதமும், ஒரு மாதத்தில் 0.83 சதவீதமும், கடந்த 6 மாதத்தில் 11.35 சதவீதமும், 2023 ஆம் ஆண்டில் 10.72 சதவீதமும் வளர்ச்சி பாதையில் உள்ளது.
மேலும் இஸ்ரேல் - ஹமால் அமைப்புகளுக்கு மத்தியிலான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வர்த்தகத்தை பெறுவது கடினமாக இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனத்தில் MNEA பிராந்தியத்தில் சிறிய அளவிலான வர்த்தகம் மட்டுமே உள்ளது. இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது.


Click it and Unblock the Notifications