ஊழியர்கள் பணி நீக்கம், கட்டாய ராஜினாமா என அடுத்தடுத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வந்த டிசிஎஸ் நிறுவனம் முதன்முறையாக ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்கி இருக்கிறது. அதுவும் மீட் - டூ- சீனியர் லெவல் ஊழியர்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய ஒரு ஜாக்பாட்டை தந்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் டிசிஎஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2% பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இதனை அடுத்து திடீர் பணிநீக்கம், கட்டாய ராஜினாமா என கடந்த ஓராண்டு காலமாக டிசிஎஸ் நிறுவனம் பல்வேறு எதிர்மறையான காரணங்களுக்காக தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறது.

டிசிஎஸ் நிறுவன செயல்பாடுகளுக்கு எதிராக தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்திடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனம் நீண்ட காலத்துக்கு பிறகு தங்கள் ஊழியர்களுக்கு குட் நியூஸ் தந்திருக்கிறது. டிசிஎஸ், இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வேரியபிள் பே அவுட்களை வழங்குகின்றன.
அதாவது நிறுவனம் ஒரு குறிப்பிட்ட இலக்கினை எட்டி விட்டது எதிர்பார்த்த அல்லது அதனை விட அதிக லாபம் ஈட்டி விட்டது, சவாலான பிராஜெக்டுகளை முடித்துவிட்டது என்பன உள்ளிட்ட காரணங்களுக்காக ஊழியர்களுக்கு வேரியபிள் பே அவுட்களை வழங்குகின்றன. சம்பளம் இல்லாமல் அத்துடன் ஒரு ஊக்க தொகை, போனஸ் என்ற வழிமுறைகளில் இது வழங்கப்படுகிறது.
அந்த வகையில் நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வேரியபிள் பே அவுட் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. குறிப்பாக மிட் - டூ- சீனியர் லெவல் ஊழியர்களுக்கு 80 சதவீதம் வரை வேரியபிள் பே வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறது. மணி கண்ட்ரோல் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏஐ அடிப்படையிலான மாற்றங்களுக்கு டிசிஎஸ் நிறுவனம் மிக தீவிரமாக தயாராகி வரக்கூடிய சூழலில் ஊழியர்களுக்கான வேரியபிள் பே அவுட்டை இருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு 20- 50 சதவீதம் வரை மட்டுமே வேரியபிள் பே வழங்கி வந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதனை 80 சதவீதமாக உயர்த்தி ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்திருக்கிறது. மூத்த நிலையில் இருக்கக்கூடிய அதாவது சீனியர் லெவல் ஊழியர்களுக்கு 40லிருந்து 80 சதவீதம் வரையும், மிட் லெவல் ஊழியர்களுக்கு 80% வரையிலும் வேரியபிள் பே வழங்கப்பட்டுள்ளது.
வேரியபிள் பே அதிகரித்துள்ளதன் மூலம் தங்களுக்கு மோசமான காலம் முடிந்து நல்ல காலம் பிறந்துவிட்டதாக ஐடி ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். டிசிஎஸ் நிறுவனம் தற்போது ஏஐ ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது. இதுநாள் வரை ஏஐ சம்பந்தப்பட்ட 5000 ப்ராஜெக்டுகளை முடித்து இருப்பதாகவும் இதன் மூலம் 1.8 பில்லியன் டாலர்கள் வருமானம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications