டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரிகளிடம் பெயர் தெரியாத ஒருவர் (whistleblower) கொடுத்த புகாரில் டிசிஎஸ் நிறுவனத்தின் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் குரூப்-ன் (RMG) குளோபல் தலைவர் ஈ.எஸ்.சக்ரவர்த்தி பல வருடங்களாக staffing firms-களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் பெற்று வருகிறார் என புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி டிசிஎஸ் நிர்வாகம் recruitment பிரிவின் தலைவரை விடுமுறைக்கு அனுப்பியது, Resource Management Group-ல் 4 முக்கிய நிர்வாக அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர், 3 staffing நிறுவனங்களை டிசிஎஸ் பிளாக்லிஸ்ட் செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து டாடா குழுமத்தில் அதிகப்படியான லாபத்தை கொடுக்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தற்போது முழுமையாக விளக்கம் கொடுத்துள்ளது. இந்த விளக்க அறிக்கையில் டிசிஎஸ்-ன் recruitment பணிகளை Resource Management Group செய்வது கிடையாது.
Resource Management Group-ன் முக்கிய பணி டிசிஎஸ் நிறுவனத்தில் இருக்கும் ப்ராஜெக்ட்-களுக்கு தேவையான ஊழியர்களை நிரப்பும், இதேபோல் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கரான்டிராக்டர் நிறுவனங்கள் வாயிலாக கான்டிராக்ட் ஊழியர்களை பணியில் அமர்த்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

டிசிஎஸ் புகார் பெற்ற உடன் விசாரணை செய்யப்பட்டதில், நிறுவனத்தில் எவ்விதமான மோசடியும் நடக்கவில்லை, இதேபோல் நிதி இழப்புகளும் ஏற்படவில்லை. ஆனால் சில ஊழியர்களும், சில கான்டிராக்டர் நிறுவனங்களும், டிசிஎஸ் நிறுவனத்தின் விதிமுறை மீறல்களை செய்துள்ளனர். மேலும் இதில் எந்த உயர் அதிகாரிகளும் ஈடுபடவில்லை என்பதையும் டிசிஎஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் இதனால் விதிமுறைகளை மீறி நியமிக்கப்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்தாலும், இது சில ஊழியர்களும், சில கான்டிராக்டர் நிறுவனங்களும் செய்த விதிமுறை மீறல் என்பதால் பணியில் இருக்கும் ஊழியர்களை பாதிக்காது. ஆனால் போலி அனுபவம், திறனற்று பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு எப்போதும் பாதிப்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications